Storytamil

நூல்

Post Views: 210 ஏசி குளிரூட்டப்பட்ட அந்த அறையில் ஏழு பேர் அமர்ந்திருந்தனர், ஒரு நவ நாகரீக பெண் சரளமாக ஆங்கிலத்தில் எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள். ஆறு...
Storytamil

கழுகார்

Post Views: 189  அது ஒரு கழுகு, கழுத்தில் வெள்ளை அடித்தார் போல இருக்கும் மாநிற கழுகு. அதற்கு  வானமே எல்லை.. காடும் நாடும் நதியும் ஒன்றே. சாதி இல்லை என்றாலும் ஜாதி உண்டு.. அதன் சுதந்திரம் அளப்பறியாதது . பாஸ்போர்ட் போன்ற வஸ்துக்கள் இல்லாமல் கண்டங்களை கடந்து பறந்து செல்லலாம்  . பாகிஸ்தான் வழியாக தாலிபான்களின் குடியிருப்பின் அருகே டேரா போட முடியும். யாரும் போக முடியாத அந்தமான் தீவின் சந்துபொந்துகளை அளக்க முடியும். என்ன அங்கே இன்றும் வாழ்ந்து வரும் காட்டுவாசிகளிடம் சிக்காமல் இருக்க வேண்டும். சிக்கினால் வறுவல் தான் ..  இன்றும் ஆதி மனிதனாகவே இருக்கும் அந்த மடையர்களுக்கு நடமாடும் எதை கண்டாலும்உணவே .. அந்த கழுகின் மூதாதையர்களின் கூற்றின்படி , மனிதர்கள் ஒன்று கழுகைஉண்பார்கள் இல்லை பயப்படுவார்கள் .  ஆசிய கண்டத்தில்  , சற்று வடக்கே சென்றால்சப்பை மூக்கு மக்களின் உணவாகவும் வாய்ப்பு உள்ளது . சரி சற்று தெற்கே பாரத கண்டத்திற்கு பறந்தால் அங்கே இருக்கும் சில கூமுட்டைகள் , கழுகை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள் . .. மேலிருந்து அவர்களை பார்ககும்போது சிரிப்பு வரும்.. ஆதி மனிதன் தான் , தனக்கு எது புரியவில்லை என்றாலும், அதற்கு பயந்து, அதை வழிபட ஆரம்பித்தான் என்றால் , இத்தனை ஆயிரம்ஆண்டுகள் கடந்தும் இதை செய்யும் மனிதர்களை என்ன சொல்வது ? அதிலும் மின்னல் , இடி போன்றவற்றை  கிரேக்க மக்கள் கடவுள் ஆக்கினால் , ஆசிய கண்டத்தில் பசு மாடும் , யானையும் கடவுளாம் . எருமை மாடு என்ன பாவம் செய்தது.. இதில் யானைகளை பிச்சை எடுக்க வைத்து இவர்கள் படுத்தும் பாடு கொடுமையானது. இதை விட மேலாக ஒரு பசுமாட்டை வைத்து இவர்கள் செய்யும் கூத்து , இவ்வுலகில் யாரும் செய்ய துணியாதது .  ஒரு உயிரினத்தின் ஆக முக்கியாமான பணிகள் இரண்டு . ஒன்று உணவு உண்பது , மற்றொன்றுஅதை வெளியேற்றுவது  . ஆனால் இந்த பாரத தேசத்தில்  ஒரு மாட்டினாள் நிம்மதியாக சிறுநீர் கழிக்க கூட முடியவில்லை , சொம்பை தூக்கிக்கொண்டு துரத்துகிறார்கள். மிருகமாகவே இருந்தாலும் ஒரு எல்லை வேண்டாமா..  நல்ல வேளை கழுகு மூத்திரத்தில் ஒன்றும் இல்லை, அல்லது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை .. கண்டுபிடித்தால் என் நிலைமை கஷ்டம்.   
Storytamil

காலம்

Post Views: 203  காலம் விநோதமானது , நாம் எதிர்பார்க்கும் நேரங்களில் மெதுவாகவும், எதிர்பாராத நேரங்களில் இன்னும் மெதுவாகவும் செல்லும். காலம் அல்லது  நேரம் என்பது நாம்...
Storytamil

கடைசி தொண்டன்

Post Views: 230 காலையே கட்சி ஆபிசுக்கு சென்று விட்டால், எப்படியும் காலை டிபனை தேர்த்தி விடலாம் என்று சோமு கணக்கு போட்டுக்கொண்டே மீதி இருக்கும் குவாட்டரை...
Storytamil

Quarter

Post Views: 107 அது ஒரு வெள்ளி இரவு, நாலு தூறல் போட்டு வானம் ஹே என்று பொய்த்து விட , மே மாதத்தின் வெக்கை இரவிலும்...
Storytamil

Bank

Post Views: 96 மணி நாலு பத்து , இன்னும் நாற்பது நிமிடங்களில் உள்ளே சென்றால் சரியாக இருக்கும் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டான் ராஜ் . வங்கியின்...
Storytamil

ஷங்கர்

Post Views: 205 ஷங்கருக்கு படபடப்பு அதிகமானது, உடல் வியர்த்து, சட்டை நனைய தொடங்கியது. அடடா இப்படி செய்து விட்டோமே என்ற நினைப்பு வந்து வந்து சென்றது....
Uncategorized

Pagam 1

Post Views: 90 வண்டிப்பாளையத்தில் புழுதி பறக்க வந்து நின்றது அந்த பச்சை நிற பேருந்து. வந்து நிற்கும் முன்பே வாலிபர்கள் சர சரவென குதித்து ஓட...