2022 – புது ஆண்டு, புது தொடக்கம்
நட்புகளுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அடுத்த ஆண்டிலும் கொரோனாவின் ஆறாவது பிள்ளையான ஓமிக்ரான் நம்மை அடித்து , துவைத்து , டவுசரை கிழித்து ஓட வைத்து...
கொற்றவை
சங்கிகள் சூழ் உலகில் மங்கிகளுகெல்லம் விருந்து.. கடவுளே வந்து , நான் தான் கடவுள் என்றாலும், காயடித்து அனுப்பும் உலகமிது.. மொட்டு பூவாகும் முன் கசக்கும் உரிமை பெற்றவர்கள் குழந்தைகளே.. சுட்டெரிக்கும் சூரியனின் கதிர்களை இழுத்து பிடித்து நெல்லை விளைவிக்கும் விவசாயிக்கு விலை சொல்பவன் வெயிலிலே தலைகாட்டதவனாக தான் இருக்கிறான்.. பல்லில்லா பாட்டியின் சுருங்கிய சதையை ...
மின்னல் முரளி – விமர்சனம்
மூஞ்சி புக்கில் எங்கு திரும்பினாலும் ராக்கி / மின்னல் முரளி பட பில்டப்புகள் தான். இதில் மின்னல் டைரக்டு ott ரிலீஸ் என்பதால் அதை ஆரம்பித்தேன் ....
குடைக்குள் நடை – இந்த வார சிறுகதை
டிசம்பரில் நிம்மதியாக ஒரு வாக்கிங் போக முடிகிறதா இந்த ஊரில் . கால் மைல் நடப்பதற்குள் மழை துரத்துகிறது . நாலு மணிக்கே எழுந்து போனாலும் கூடவே வந்து தொலைக்கிறது....
ரஜினி எனும் மாயோன் – 4 – தர்மத்தின் தலைவன்
இந்த தொடரின் முதல் மூன்று பாகங்களை படிக்க – பாபா தோல்வி , சந்திரமுகி வெற்றி , சிவாஜி மிகப்பெரிய ஹிட். இதை தாண்டி...
டிவிஎஸ் பிப்டியும் – புழுதி பறக்கும் செம்மண்பூமியும்..
விடலை பருவத்தில் , விடுமுறை வந்தால் தவறாமல் எழும் ஒரே கேள்வி பின்னவாசலா இல்லை ஆர் யி சி யா என்பதே . ஒரு பக்கம் நண்பர்கள் ,...
BJP and DMK
December 5, 1992, Karunanidhi wrote in Murasoli ‘What does karseva mean? Service to god or service to sow seeds of unrest? [And...
ரஜினி எனும் மாயோன் – 3 – தரமான சம்பவம்
பாகம் ஒன்று படிக்க இங்கே கிளிக் செய்யவும் – https://writervivek.com/2021/12/ரஜினி-எனும்-மாயோன்-2-அடிபட/ பாகம் இரண்டு படிக்க இங்கே கிளிக் செய்யவும் – பாகம் 3 – தரமான...
ரஜினி எனும் மாயோன் – 2 -அடிபட்ட சிங்கத்தின் கர்ஜனை
முதல் பாகத்திற்கு இங்கே செல்லவும் –> ரஜினி எனும் மாயோன் – 1 ஒரு வாலிபன் தோல்வி கண்டால் ஒன்று அவன் உத்வேகம்...
ரஜினி எனும் மாயோன் – 1
போன வாரம் படையப்பா படம் போட்டிருந்தார்கள் , என்ன ஒரு படம் . இப்பொழுது தொலைக்காட்சியில் போட்டாலும் டி ஆர் பி யை அள்ளி தரும் அமுத சுரபியாக இருக்கிறது .முத்து / பாட்ஷா எல்லாம் இதே கேட்டகரி படங்கள் தான் . எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. அதே நேரத்தில் தான் அண்ணாதே படமும் ரிலீஸ் ஆகி நன்றாக ஓடியதாகவும், இல்லை சுமார் தான் என்று இரண்டு விதங்களாகவும் சொல்லபடுகிறது. ஆனால் சில விமர்சகர்கள் கழுவி ஊத்துகிறேன் பேர்வழி என்று வன்மத்தை கக்கியும் வருகின்றனர் . இதையெல்லாம் ஒதுக்கி வைத்து ரஜினி எனும் நடிகனின், ஒரு மாபெரும் மனிதனின் கடைசி கட்ட திரை வரலாற்றை உற்று நோக்கினால் ஒரு உண்மை புலப்படும் . அது ஒரு சோக கதையின் தொடக்கமாகவும் அமையும் . சரி கதையை ஆரம்பிப்போமா? பாட்ஷா படத்தில் ஒரு பாட்டு வரும். எட்டு எட்டா மனுஷ வாழ்க்கை பிரிச்சுக்கோ என்ற பாடல் தான் அது . அதில் கடைசி எட்டிற்கு அடுத்து retirementஐ சொல்லி இருப்பார்கள், அது இல்லையேல் நிம்மதி இல்லை என முடியும் . ஆனால் அப்படி ஒன்றும் இல்லாத மனிதராக ரஜினி அவர்கள் மாறி விட்டாரோ என்றே தோன்றுகிறது. படையப்பா என்னும் மாபெரும் வெற்றி படம் தான் அவரது திரை துறை கடைசி அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கிறது. அதற்கு சில வருடங்களுக்கு முன்பு தான் அவர் ஜெயலலிதா அம்மையாருக்கு எதிராக ஒரு கருத்தை சொல்லி , ஆட்சி கட்டிலில் இருந்து இறக்கி வைத்தார். அதே டெம்ப்ளேட் இந்த படத்திலும் வரும் . பொன்னியின் செல்வனில் இருந்தே மூல கதை எடுக்க பட்டதாக சொன்னாலும் , நீலாம்பரி யாரை நியாபக படுத்துகிறார் என்று யோசித்தால் விஷயம் பிடிபடும் . ஏன் படையப்பாவில் இருந்து இந்த கட்டுரையை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்கான பதில் இது தான் . இந்த படம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது . இந்த படத்தில் இருந்து தான் விக் அணிய ஆரம்பித்தார் ரஜினிகாந்த். அதே போல எண்பதுகளில் அவருக்கு ஜோடியாக நடித்த லட்சுமி இந்த படத்தில் அவரின் அம்மாவாக புரொமோஷன் வாங்கி இருந்தார். இது ஒரு மிக முக்கியமான பாய்ண்ட். ...