டிவிஎஸ் பிப்டியும் – புழுதி பறக்கும் செம்மண்பூமியும்..
விடலை பருவத்தில் , விடுமுறை வந்தால் தவறாமல் எழும் ஒரே கேள்வி பின்னவாசலா இல்லை ஆர் யி சி யா என்பதே . ஒரு பக்கம் நண்பர்கள் ,...
ரஜினி எனும் மாயோன் – 3 – தரமான சம்பவம்
பாகம் ஒன்று படிக்க இங்கே கிளிக் செய்யவும் – https://writervivek.com/2021/12/ரஜினி-எனும்-மாயோன்-2-அடிபட/ பாகம் இரண்டு படிக்க இங்கே கிளிக் செய்யவும் – பாகம் 3 – தரமான...
கோமாவில் நாகரீகம்
வருத்ததிற்கும் மன்னிப்பிற்கும் உள்ள இடைவெளியில் தான் நாகரீக அரசியல் புதைந்துள்ளது
சோமாவாமாவில் சாமி மாமா
“டீ-3 , டீ -2 , டீ -1 “, “லிஃட் ஆப் ” – “பான் வாயேஜ்” என்று அந்த இயந்திர மங்கை சிந்தடிக் குரலில்...
நரகம் – மறுபக்கம்
பதறியபடியே படுக்கையில் இருந்து எழுந்தான் முகுந்த். என்ன ஒரு கோரமான கனவு ! படபடக்கும் நெஞ்சினை ஆசுவாச படுத்த தண்ணீர் பாட்டிலை தேடி எடுத்தால், அதில் தண்ணீருக்கு பதில் ரத்தம் ! விடுக்கென படுக்கையில் இருந்து எழுந்து முகத்தை துடைக்க கையை தூக்கினால் , கை இல்லை. அதற்கு பதில் பாம்புகள் நெளிந்தன ! விரல்களுக்கு பதில் புழுக்கள் ! தொண்டை வறண்டது .தண்ணீர் குடிக்க பிரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம் , அழுகியநிலையில் சடலங்கள் , அதில் ஒரு பாட்டியின் சடலம் வாயை பிளந்தபடி முறைத்தது . முகுந்திற்கு இதயத்துடிப்பு அதிகரித்து வாந்தி வருவது போல இருந்தது . உடனடியாக பாத்ரூம் சென்று வாந்தி எடுத்தால் , வாயிலிருந்து பூச்சிகளாக கொட்டின ! பின்னங்கால்...
கீரனூர் கோமதியப்பன்
கீரனூர் கிராமத்தில் இருக்கும் அறுபது குடும்பங்களுக்கும் தெரிந்தவர் கோமதியப்பன். உடனே எதோ மிராசுதாரர் என்றோ , பண்ணையார் என்றோ நினைத்துவிட வேண்டாம். அவர் ஒரு பால்காரர். பால் பாக்கெட்டை தூக்கி விட்டெரிந்து செல்லும் இளவட்டம் இல்லை. இருபத்தி மூன்று ஆண்டுகளாக அந்த ஊரில் பிறக்கும் குழந்தை முதல் , கடைசிசொட்டு பால் குடித்து மண்டையை போடும் கிழம் வரை இவர் கொடுப்பதை தான் குடிக்கவேண்டும் . தினமும் காலை நான்கு மணிக்கே எழுந்து , பாலை கறந்து முடித்து விடுவார் . பாலை இரண்டு அலுமினிய கேன்களில் வண்டியில் ஏற்றி ஊரையே வலம் வருவார். டீ கடைகளுக்கு கொடுக்கும் பால் கேனில் அரை பங்கு தண்ணீரையும் , மற்றொன்றில் கால் பங்கு தண்ணீரை கலந்து வீடுகளுக்கும் கொடுப்பார். தாய் பால் குடிக்காத குழந்தைகள் மட்டும்ஸ்பெஷல் , கம்மியான தண்ணீர் கலந்து சப்பளை செய்வார் . ஆறு மணிக்கு டீ கடையில் ஆரம்பிக்கும் இந்த பால் சப்பளை , ஒன்பது மணிக்கு முடியும் . முடியும் இடம் முப்பாத்தம்மன் கோவிலாக இருக்கும் . ஊரின் நாட்டாமைக்கே ஏழே முக்காலுக்கு தான் பால் கிடைத்து , காபி கிடைக்கும் . ஊரின் அத்துணை விசேஷங்களிலும் ஜாதி பார்க்காமல் அழைக்கப்படும் ஒரே ஆளாக கோமதியப்பன் தான் இருப்பார் . புகையிலை போடுவாரே தவிர , சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் . அதிகமாக பேச மாட்டார் , வீண் வம்புக்கு போக மாட்டார் , புறன் பேச மாட்டார். ஒவ்வொரு வீட்டுவாசலுக்கும் வந்து இரு முறை பெல் அடிப்பார்,ஆள் வரவில்லை என்றால் அடுத்த வீடு . கடைசியாக விடுபட்ட வீடுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக சென்று விட்டே வீடு திரும்புவார். மாதம் ஆறு தேதி கடந்து விட்டால் , காசு வசூலிக்க ஆரம்பிப்பார் . எப்படியும் இருபது தேதிக்குள் வசூலித்து முடிப்பார். அன்றும் அப்படிதான் ஆரம்பித்தார் . காலை நாலு மணிக்கு இருக்கும் ஆறு கன்றுக்குட்டிகளையும் அவிழ்த்து விட்டு பால் குடிக்க விட்டார் . ஐந்து நிமிடத்தில் வாயில் புகையிலையை போட்டு ,பால் கறக்க ஆரம்பித்தார்.. பால் கறந்து முடித்து அனைவருக்கும் சப்பளை செய்து முடித்தார் . அன்று இரவு பால் குடித்து முடித்த ஒருவருக்கு மூச்சு திணறல் வந்தது . இந்த செய்தி தீயாக பரவ ஆரம்பித்தது. அடுத்த நாள் நாலு பேருக்கு வயிற்று போக்கு மற்றும் இருமல் வந்தது . டாக்டரே இல்லாத அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் இவரது பாலால் தான் பிரச்சனையோ என்று பேச ஆரம்பித்தனர் . மூச்சு திணறல் வந்த அந்த பெருசு மண்டையை போட்டது. அன்றில் இருந்து மூன்றாவது நாளில் மேலும் ஒருவர் இறக்க , பழியெல்லாம் கோமதியப்பனின் மேல் விழுந்தது . முற்றிலும் பால் வாங்குவதையே தவிர்த்து விட்டனர்அந்த ஊர் மக்கள். கோமதியப்பணுக்கு அழுகையே வந்து விட்டது . எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் அந்த ஊர் மக்கள் கேட்கவேயில்லை. இவரிடம் பேச்சு கொடுக்கவே மறுத்தனர் . விரக்தியின் உச்சிக்கே சென்றார். ஒரு வாரம் கழித்து அந்த கிராமத்திற்கு வந்த அரசாங்க டாக்டர் , டோமினோ என்னும் கொடிய நோய் ஒன்று பரவ ஆரம்பித்து இருப்பதாகவும் , அது ஐக்கிய அரபு நாடுகளில்...
தலைவர்டா
இது போன்ற இன்னொரு தலைவர் படம் வருமா என்றே தெரியவில்லை .. என்ன ஒரு ஸ்டைல் , என்ன ஹேர் ஸ்டைல், தலைவன் கலக்குறாங்க . தலைவருக்கு...
மனைவி அமைவதெல்லாம் ..
“இட்லியா இல்லை பிரெட்டா” கல்யாணம் ஆகி ஆறு ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு கேள்வி வந்தது. முதல் நாள் இரவே, நாளை இட்லி உப்புமா என்று ஒப்பந்தம்...
தமிழனுக்கு இந்தி தேவையா – பாகம் இரண்டு
பாகம் ஒன்று – link வீட்டிலேயே உட்கார்ந்து , வடகறி ஆன்லைனில் ஆர்டர் செய்ய ஹிந்தி தேவையாம் . சோமாடோகாரன் ஒருவன் இப்படி சொல்ல பற்றிக்கொண்டது நெருப்பு . எனக்கு...
புக்பெட் – பாரா வகுப்பு
எல்லோராலும் கதை எழுத முடியும். எல்லோராலும் சிறப்பாக எழுத முடியுமா? முடியும் என்ற நம்பிக்கையை பாராவின் Bukpet-writeRoom வகுப்பு தந்திருக்கிறது. எது கதை ஆகிறது, எப்பொழுது நல்ல...