காலம் விநோதமானது , நாம் எதிர்பார்க்கும் நேரங்களில் மெதுவாகவும், எதிர்பாராத நேரங்களில் இன்னும் மெதுவாகவும் செல்லும். காலம் அல்லது  நேரம் என்பது நாம் இருக்கும் புவியை சார்ந்தது .. பூமியில் ஒரு நாள் என்பது எங்கயோ கண் கானா கிரக தேசத்தில் ஒரு நிமிடமாகவும் , அதற்கு வடக்கே இருக்கும் மற்றொரு கிரகத்தில் ஒரு வருடமாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.. ஒரு கால சக்கிரம் கண்டு புடித்து அரை மணி நேரத்தை அரை நொடியாக மாற்றினால் எப்படி இருக்கும் .. டைம் மெஷின் எனப்படும் கால சக்கிரத்தை இங்கே ஒருவர் கண்டு புடித்தே தீருவர் , அதை வைத்து காலத்தில் பின் நோக்கி பயணம் செய்ய வாய்ப்பே இல்லை , காரணம் ஒன்று தான் , அதில் நான் பின் நோக்கி பயணம் செய்து என் தாத்தாவின் தலையில் ஓரு கல்லை போட்டால் பிரளயம் உண்டாகும். தாத்தா இல்லையேல் அப்பா இல்லை , அப்பா இல்லையேல் நான் இல்லை , நானே இல்லை என்றால் , பின்னர் யார் பின் நோக்கி சென்று எனது தாத்தாவை மட்டை செய்தது . இந்த ஒரே விதியை ஒதுக்கி வைத்து காலத்தில் முன் நோக்கி செல்லும் சக்கரத்தை உருவாக்கலாம் . அண்ட வெளியில் அங்கங்கே இருக்கும் பிளாக் ஹோல் போன்ற வற்றை பிடித்து , கசக்கி பிழிந்து உள் நுழைந்து , அந்த பக்கம் நாம் வரும் போது காலத்தில் முன்னே சென்றிருப்போம் . இந்த யோசனைகள் முகிலனின் மண்டையில் கதக்களி ஆடிக்கொண்டிருந்த பொழுது தான் அந்த சத்தம்  கேட்டது , ஆம் திறந்தே விட்டார்கள் , அடித்து பிடித்து , எழுந்து  ஓடி வரிசையில் நான்காவது ஆளாக நின்றான் . ஐந்தே நிமிடத்தில் ஒரு ஹாப் பாட்டிலை வாங்கினான் , கால சக்கரம் செய்யும் அந்த முடிவை அடுத்த நாளிற்கு தள்ளி வைத்தான் 

Hi, I’m valaithinni

Leave a Reply