Story

The Omnipotent [Tamil]

அவள் உபெரை விட்டு வெளியே வந்தவுடன், மது கேரியரைப் தோளில் வைத்தபடி,   கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு மனிதர் நிற்பதை அவள் கவனித்தாள். “அப்படியானால், இவர் தான்  நம் டேட் ஆகா இருக்க வேண்டும்,”என்று  அவள் நினைத்தாள். அவர் கதவுகளைத் திறந்து அதை ஒரு தொழில்முறை செப்பரோனைப்  போல, இழுத்துப் பிடித்த படி நின்றார். . அவர்கள் உணவகத்திற்குள் நுழைந்ததும், தங்களுக்கு டேபிள் கிடைக்குமா என்று யோசித்தாள். அவர்களுக்கு முன்பதிவு இருந்தது, ஆனால் அந்த சிறிய வரவேற்பறையில் இருந்த கூட்டம், நள்ளிரவுக்கு முன் அவர்களுக்கு மேஜை கிடைக்குமா என்று அவளை யோசிக்க வைத்தது . அவளுடன் வந்தவன்  , காத்திருப்புப் பணியாளர்களிடம் சில டாலர் பில்களை நழுவ விட்டான், சில நொடிகள் கழித்து, அவர்களுக்கு ஒரு மூலையில் இடம் கிடைத்தது. அதுதான் சிறந்த இடம் என்று ஊழியர்கள் சொன்னார்கள், அவர் அங்கே அடிக்கடி வந்து செல்பவரைப் போல அதை ஆமோதித்தார்.  தலையசைத்தார். ஒவ்வொருவரிடமும் மெனுவை  கொடுத்துவிட்டுத் தலைவணங்கி நகர்ந்தார்கள் . ஒரே டேபிளில் இரண்டு பணியாளர்கள் காத்திருந்ததை அவள் பார்த்ததில்லை. அவனோ பையிலிருந்து வெள்ளை ஒயின் பாட்டிலை எடுத்து கண் சிமிட்டினான். பணியாளர்களில் ஒருவர் அவரைப் பார்த்து இரண்டு மதுக் கிளாஸ்களை கொண்டு வந்தார்.

ஒரு நிமிடம் சராசரி விஷயங்களையும், நாட்டு நடப்புகளையும் பரிமாறிக் கொண்ட பின் , அவர் ஒரு தீர்க்கமான பார்வையுடன் ஆரம்பித்தார். “ஒருவரின் வாழ்க்கை உண்மையில் எப்போது தொடங்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”. அவளது மூளை அந்தக் கேள்வியின் உண்மையான அர்த்தத்தை செயலாக்கும் முன்

 “வாழ்க்கை அறுபதாம் வயதில்  இருந்து தான் தொடங்குகிறது என்று, நான் நினைக்கிறேன்.” அவன் அவள் கண்களில் ஒப்புதலைத் தேடினான் .

“ஒரு டேட்டிங்கை இப்படியா தொடங்குவார்கள் ” என்று அவள் நினைத்தாள்.

அவளுக்கு  விசித்திரமானவர்களுடன் பழக்கம் இல்லாமல் இல்லை , ஆனால் அவளுடைய வினோதமானவர்கள் இந்த மாதிரி உடை அணிய வில்லை அல்லது அவளுக்குப் பிடித்த உணவகத்திற்கு அழைத்துச் செல்லவில்லை! கடைசியாக அவளுடன் டேட்டிங் செய்த பையன், மேசையின் மேல் வாந்தி எடுத்தான் , அவள் அந்த பையனுக்கு ஒரு uber ஐ பதிவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இவன் ஏனோ வித்தியாசமானவனாகத் தெரிந்தான். 

அவள் ஒரு ‘ஏன்’ என்று கேட்டுவிட்டு, அந்த உரையாடலுக்குள் நுழைந்தாள். அவன் வெயிட்டராய் வரும்படி  சைகை செய்தான். அந்த வெயிட்டரும் ,  பாட்டிலில் இருந்து வெளியே வந்த ஜீனி போல உடனே வந்தான் . அவன் ஒயின் பாட்டிலை திறக்கச் சொன்னான், அவன் அதைத் திறந்ததும், அவள் ‘ஏன் யாருடைய வாழ்க்கையும் அறுபது வயசில்  ஆரம்பிக்கும்’ என்று அவள் தொடர்ந்தாள்.

அவன் சொன்னதையே அவள் திரும்பத் திரும்பக் கேட்டவுடன், அவன்  ஒரு புலி தன் இரையை பார்க்கும் பார்வையுடன் அவளைப் பார்த்தான்.

“என்னைப் பொறுத்த வரியில் ஒரு மனிதன் , அறுபது வயதில் இருந்து தான் இந்த உலகில் சுதந்திரமாக வாழத் தொடங்குகிறான்.”. “நான் உங்கள் வயதைக் கேட்க விரும்பவில்லை, ஏனென்றால் முதல் டேட்டில் வயதைக்  கேட்பது மிகவும் மரியாதை குறைந்த செயலாக  இருக்கும்! எனவே நான் என் வயதில் இருந்து தொடங்க விரும்புகிறேன்! இன்று எனது 30வது பிறந்தநாள். கடந்த ஒரு மணி நேரமாக என்னுடன் இருந்ததில் இருந்து உங்களுக்கு என்னைப் பற்றி என்ன தோன்றுகிறது?  நீங்கள் என்னை வாழ்க்கையில் வெற்றி பெற்றவனாக , , மகிழ்ச்சியாக வாழ்பவனாகப் பார்க்கிறீர்களா “

ஒரு நொடி அவளைப் பார்த்தான், அவள் பதில் சொல்லும் முன் அவனே  தொடர்ந்தான்.

“நீங்கள்  பதில் சொல்வதற்கு முன், ஒருவனின் வெற்றியையும், அவன் மகிழ்ச்சியையும்  யாரேனும் எப்படி தீர்மானிக்கிறார்கள், எதன் அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்!

சிறு  புன்னகையுடன் தொடர்ந்தான் .

“ஒருவரின் செல்வம், குடும்பம் ,கல்வி, அல்லது அவர்களின் தற்போதைய வாழ்க்கை முறை, அல்லது அவர்களின் வேலை அல்லது அவர்கள் வீட்டில் வைத்திருக்கும் விலையுயர்ந்த விரிப்புகள் மூலம் அளவிட முடியுமா .” அதற்குள் அவன் கொண்டு வந்த வைனின் நறுமணம் விரைவாகஅவர்கள்  மேசையை நிரப்பியது. 

அவனே  தொடர்ந்தான் , “இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.”

“இது அனைத்தும் ஒரே கேள்வியுடன் தொடங்குகிறது: ஒருவர் தன்னைப் பற்றி எப்படி உணருகிறார்? “.

“அதற்கு, ‘எனக்குத் தெரியாது’ என்பதே எனது பதில். அவர் அளவிடப்பட்ட இடைநிறுத்தம் விட்டுவிட்டு “இன்னும்” என்று முடித்தார்.

உரையாடல் எங்கெங்கோ  போவதாக அவள் உணர்ந்தாள். ஆனால் ஏதோ ஒன்று அவளை அவனுடன் அங்கே உட்கார வைத்திருந்தது.

அவர் அதை சந்தேகத்திற்கு இடமின்றி முடித்தார், “நீங்கள் விரும்பியதை வாங்குவது, நீங்கள் விரும்பியவருடன்வாழ்வது , நீங்கள் விரும்பியதைச் செய்வது,இவற்றைத் தான்  மகிழ்ச்சியான வாழ்க்கை உங்களுக்கு உறுதியளிக்கிறதா ? யாராவது அந்த வாழ்க்கையை வாழ்ந்தால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? “

அவள் பதில் சொல்ல விரும்பாதது போல் சில நொடிகள் அவனைப் பார்த்தாள். பார்வையால் அவனை அளக்க பார்த்தாள். அவன் நல்ல உயரம், வலுவான கன்னத்துண்டுகள், விரிந்த தோளும் , புஜங்களாலும் கட்டமைக்கப் பட்டிருந்தான். அவளை மரியாதையாக நடத்தினான், ஒரு கிறுக்கனுக்குண்டான குணங்களைக் கொண்டிருந்தான் . ஆனாலும் அவனுடைய விசித்திரம் அவளைக் கவராமலும் இல்லை. அவனது வினோதமான கேவில்கள் ,  ஒரு காந்தம் போல அவனிடம் அவளை நெருக்கின. 

 1472 தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த வெள்ளை ஒயினை அவள் பருகினாள்

. அவளுக்கு அது போலியாக இருக்க வேண்டும் என்று தோன்றியது . அவளுக்கு ஆச்சரியப்படுத்தும் விதமாக , அந்த மது அற்புதமான சுவையை கொண்டிருந்தது. . அவனே அந்த  மதுவை அந்த ஹோட்டலுக்கு  கொண்டு வந்ததை கண்டு அவள் திகைத்தாள்.. யாரும் எதுவும் கேட்கவில்லை. ஒருவேளை நிஜமாகவே இது 1472இல் தயாரிக்கப் பட்டிருந்தால் , எப்படியும் பல ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டிருக்கும். அதை முதல் டேட்டில் கொண்டுவர இவன் பெரிய கோடீஸ்வரராகத் தான் இருக்க வேண்டும்.  அல்லது திருடி இருக்கலாம். 

மது அவளை மீண்டும் அவனது கேள்விக்கு இழுத்தாள்.

“நீ சொல்வதை எல்லாம் வைத்துப் பார்த்தால், எனக்கு அது வெற்றிகரமான வாழ்க்கையாகத் தான் தெரிகிறது. குறைந்த பட்சம் மகிழ்ச்சியான வாழ்க்கையாகப் படுகிறது . வாழ்க்கையின் இந்த கட்டத்தில் உங்களுக்கு வேறு என்ன தேவை? ஒரு யாச்ட் ? ஒரு பென்ட்ஹவுஸ்? அல்லது நல்ல மனைவியா?”என்று சொல்லி விட்டு  நாக்கை கடித்தாள். அவள் கொஞ்சம் அதிகமாகவே பேசி விட்டதைப் போல  தெரிந்தது. முதல் டேட்டில்  திருமணம் பற்றி யாரும் பேசுவதில்லை. அதுவும் சந்தித்த ஒரு மணி நேரத்திற்குள் கண்டிப்பாக யாரும் பேசியிருக்க மாட்டார்கள் . இது எல்லாம் மதுவின் செயல் என்று அவள் நினைத்தாள்!

அவன் தொடர்ந்தான்.

“சரி, ஆரம்பத்திலிருந்தே தொடங்குவோம்”

”  பிறந்தவுடன், என்னை கவனித்துக் கொள்ள, எனக்கு உணவளிக்க மக்கள் இருந்தனர், அவர்கள்  என் டயப்பரைச்  சுத்தம் செய்தனர்.” ஒரு வினாடி அங்கேயே நிறுத்திவிட்டு, ” அதிர்ஷ்டவசமாக அந்த  இன்றுவரை  நீடிக்கவில்லை” என்று புன்னகையுடன் கூறி கண்ணடித்தான் .

“அந்த சமயங்களில், மக்கள் என்னைச் சுற்றி இருப்பதை  மகிழ்ச்சியாகக் கருதினார்கள் “

அடுத்த 10 ஆண்டுகளில் இது ஒரு விசித்திரமானவை . எனக்கு நண்பர்கள் கிடைத்தனர் . அவர்களில் சிலர் என்னை விரும்பினர், சிலர் என்னை வெறுத்தனர்.

எனக்கு ‘அங்கே’  முடி வர ஆரம்பித்தது..

அவன் வாக்கியத்தை முடிக்கும் முன், இந்த உரையாடல் அவளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறதா என்று அவள் கண்களைப் பார்த்தான்.. ஆனால் அவள் கண்களில் வைரம் மின்னுவது போன்ற   ஒரு பிரகாசத்தை அவன் பார்த்தான், அது அவனைத் தொடரச் செய்தது.

என் பதின்பருவத்தில் நான் மூர்க்கத்தனமான போக்குடன் இருந்தேன். இப்போது நான் அதை திரும்பிப் பார்க்கும்போது, ​​​ அன்று செய்ததை இன்று செய்யச் சொன்னால் நான் அதையெல்லாம் செய்திருக்க மாட்டேன். என் பெற்றோரை சங்கடப்படுத்தினேன். என் காதலியைச்  சங்கடப்படுத்தினேன். சில சமயங்களில் அவர்கள் என்னால் பல  அசௌகரியத்திற்கு ஆளானார்கள். 

பின்னர் கல்லூரி வாழ்க்கை வந்தது.

வேடிக்கையாக இருந்தது. நிறைய மது  , பெண்கள் இருந்தனர் , கொஞ்சம் படிப்பு , பின்னர் நான் பட்டம் பெற்றேன்.எதோ ஒரு புகழ் பெற்றவர்  எனக்கு பட்டம் வழங்கியபோது என் பெற்றோரின் கண்ணீரை நான் கண்டேன்.

திடீரென்று, என்னை ஒரு  முழு மனிதனாக பிரகடனப் படுத்தினார்கள் . எல்லோரும் எதிர்பார்த்தது போலவே நான் இருந்தேன் . அதுவரை எனக்கு எந்தப் பொறுப்பும் இருந்ததில்லை. என் குடும்பத்தினர் என்னிடமிருந்து எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் முடிந்தன . நான் செல்லும் பாதையில் எது முக்கியம் என்று ஆளுக்கு ஒன்று சொன்னார்கள்.  

என் தந்தை சொன்னார், “மகனே, கல்வி மற்றும் கடின உழைப்பு மட்டுமே உன்னை உயர்த்தும்” .

 என் அம்மா சொல்வார், “உன்  வாழ்க்கையில் எல்லா பெண்களையும் நீங்கள் மதிக்க வேண்டும், இல்லையெனில் உன் வாழ்க்கை பரிதாபமாக இருக்கும்.”

என் மாமா சொல்வார் “வாழ்க்கைக்கு முக்கியமான தேவை  நல்ல புட்டம்  மற்றும் நல்ல சம்பளம்”

என் பாட்டி சொல்வார் “நீங்கள் அழகானவன் , அந்த ஜிப்சிக்களிடம் மட்டும் சிறு வயதில் நீ சென்றதைப்  போல , சென்று விடாதே,  உன்னை சபித்து விடுவார்கள்” என்றாள் . அவள் அதை  எல்லோரிடமும் சொல்கிறாள்..

புட்டத்தைப் பற்றி பேசியது, அவள் , எழுந்திருக்காமல் இடுப்பிற்கு கீழே உள்ள ஆடையை சரி செய்தாள்.

அவன் தொடர்ந்தான். 

“பிறகு வேலைக்குச் சென்றேன். நான் மெல்ல மெல்ல அந்த அலுவலகத்தில்  உயர ஆரம்பித்தேன். இப்போது நான் எனது சொந்த நிறுவனத்தில். நான் மில்லியன்களில் சம்பாதிக்கிறேன்,  டேட்டிங் செய்கிறேன்” கோப்பைகள்  காலியாக இருப்பதைக் கவனித்தவன், இன்னொரு ரவுண்டு ஊற்றிவிட்டு, அடுத்த கிளாஸைக் குடித்தபடியே சிறிது நேரம் அவளைப் பார்த்தான்.

 அவள் அவனைப் பற்றி மேலும் அறிய விரும்பினாள்.

“இப்போது மக்கள் நான் வெற்றி பெற்றதாக நினைக்கிறார்கள் . அடுத்த கட்டமாக திருமணம் செய்து வீடு வாங்கி குடும்பம் நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்”

 “சரி . திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒரு குடும்பம் வந்த பின்னர், அடுத்து  என்ன? “

“இப்போது எனக்கு எப்பொழுதும் கொஞ்சம் அறிவுரை கூறியவர்கள் அனைவரும்

கைகளை வீசி எறிந்துவிட்டு, ‘ஏய் இது உன்  வாழ்க்கை, நீ எப்படி பார்க்கிறாயா , அப்படியே  அதை வாழ வேண்டும். ‘ என்கிறார்கள். 

எனக்கு அது பிடிக்கவில்லை.அவர்கள் அனைவரும் என் வாழ்க்கையின் இந்த கட்டம் வரை என்னை வழிநடத்தியவர்கள். . அவர்கள் எனக்காக எடுத்த அனைத்து முடிவுகளும் , இன்று என்னை,  நான் ஆக்க செய்தது . “

அவனிடம் நியாயமான கருத்து இருப்பதாக அவள் நினைத்தாள். ஆனால் எல்லோரும் இப்படித்தானே  வளர்கிறார்கள்! அவன் அடுத்து எங்கே போகிறான்  என்ற குழப்பம் அவளிடம் இருந்தது.  

“சரி இப்ப என்ன செய்யப் போகிறாய் ? “

அவர் தயங்கவில்லை, “நாம்  என் வீட்டிற்குச் செல்லப் போகிறோம், படுக்கையைப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம், அதன் பிறகு என்ன  என்று பார்ப்போம்.” அவன் சிரித்தான்

அவனது  புன்னகை குழந்தைத்தனமாக இருந்தது.

சரி நாம் , உன்  வீட்டிற்குச் சென்று நன்றாக உடலுறவு கொண்டோம் என்று வைத்துக்கொள்வோம், உங்களுக்கு என் குணம் பிடித்து , எனக்கு உன்னைப் பிடித்து போகிறது பிறகு என்ன!” அவளும் விடாமல் வம்பிற்கு இழுத்தாள். 

 “உனக்கு தான் என்னை ஏற்கனவே பிடித்து விட்டதே  ?” அவன் அவளைப் பார்த்து மென்மையான வெண்ணெயில் ஒரு சூடான கத்தி வெட்டுவது போலச்  சிரித்தான்,.

இப்போது அவள் இன்னொரு கிளாஸ் மதுவை எடுத்து தலையை ஆட்டினாள்!

“நாம் ஏன் ஆடக்கூடாது? ” என்றான்.  அவள் கன்னங்கள் சிவந்தன..

 அந்த ரெஸ்டாரண்டில் , வேறு யாரும் நடனமாடவில்லை, உணவகத்தில் ஒலித்த  மென்மையான ஜாஸ் இசையும்,  நடனத்திற்கானது   அல்ல.

மேசைக்கு அருகில் அங்கும் இங்கும் பாதங்களை நகர்த்தி ஆடி விட்டு  அமர்ந்தார்கள்.

, “நீங்கள் டேட்டிங் செய்யும் எல்லாப் பெண்களிடமும் இதைச் செய்வீர்களா ?”

“நான் திருமணம் செய்ய திட்டமிட்டவர்களிடம் மட்டும்  தான் ” என்றான்  .

அவள் ஒரு கிரந்த நிலைக்கு வந்திருந்தாள். . “பெண்கள் என்று ஏன்  பன்மையில் சொன்னாய்  ” என்று பொய்யான கோபத்தை அவன் மீது வீசினாள்.

அவர் இப்போது சிரித்தபடி  , “அதற்குத்தான்  நீ கவலைப்படுகிறாயா .”?

அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள், நன்றாக உடலுறவு கொண்டார்கள், அவனின்  மென்மையான பட்டுப்  போர்வையின் கீழ் படுத்துக் கொண்டே , அவள் “சரி, அடுத்து  என்ன” என்று கேட்டாள்.

“திருமணம் செய்து கொள்ளலாம். “

“சரி,  அதற்கு நான் ஒப்புக் கொள்கிறேன் என்று வைத்துக் கொள்வோம், நாம் ஒரு இடத்தை முன்பதிவு செய்வோமா? இது சம்மர் திருமணமாக இருக்க போகிறதா, இது குளிர்கால திருமணமாக இருக்கப் போகிறதா.”  அவள் மனதில் ஆயிரம் கேள்விகள்.

தலையை அசைத்து,  இப்போதே செய்யலாம் என்றான் .

“நினைத்த இடத்தில்  எல்லாம்  திருமணம் செய்து கொள்ள முடியாது” , என்று அவன் மூக்கில் தட்டினாள்

அவன் தலையணையைத் தூக்கி,  வைர மோதிரத்தை வெளியே எடுத்தான். அவள் இப்போது அதிர்ச்சியில் இருந்தாள்.

அவர் படுக்கையில் இருந்து எழுந்து , நிர்வாணமாக முட்டி போட்டபடி அவளுக்கு ப்ரொபோஸ் செய்தான்., 

இவை அனைத்தும் அவளுக்கு மிக வேகமாக நடப்பதாய் தோன்றின. , ஆனால் அவளால் “ஆம்” என்ற வார்த்தையை தன சொல்ல முடிந்தது.

அடுத்த நாள் காலை, அவர்கள் நல்ல சூரிய ஒளியில்,  கலிபோர்னியா கடற்கரையில் திருமணம் செய்து கொண்டனர்.

அவனுடைய அறுபதாவது பிறந்த நாள் வந்தது. அவள் கேட்டாள் “நான் கிட்டத்தட்ட மறந்துவிட்டேன்! வாழ்க்கை அறுபது  வயதில் தொடங்குகிறது என்று சொன்னாயே , உனக்கு  வாழ்க்கை இப்போதுதான் தொடங்குகிறது என்று அர்த்தமா?”  . அவள் மிகுந்த நேர்மையுடன் கேட்டாள். அவள் மனதில் ஆழமாகப் புதைந்திருந்த ஒரு வாழ்நாள் கேள்விக்கான பதிலைப் பெற முயன்றாள், அது இப்போது வெளிப்பட்டது.

அவன் முகத்தைச் சுருக்கினான்.

அவன் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வெளியேறின. அது அவனது சுருங்கிய  கன்னங்கள் வழியாக உருண்டது.

 சோகமாகப் பார்த்தான் .

‘ஏன்’

‘ஏன் என்னிடம் அப்படிக் கேட்டாய்! அதுவும்  இந்த நாளில்’

‘ஏன் எல்லாரும் ஒரே காரியத்தைச் செய்கிறீர்கள்?ஒவ்வொரு முறையும்? ‘

அவளோ , கடந்த முப்பது  வருடங்களில்  ஒரு முறை கூட அவன் அழுவதைக் காணாததால் , உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.

“அதை நீங்கள் கேட்காமல் இருந்திருந்தால் நானே சொல்லியிருப்பேன் ” என்று அவன்  தனது தலையை குனிந்தபடி,  கால்களைப் பார்த்து, ஆறுதலையும் பயத்தையும் தரும் தொனியில் கூறினான் .

 “நாம்  முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தோம். நான் உன்னுடன் இருந்த ஒவ்வொரு பிறந்த நாளிலும் இந்தக் கேள்வியைக் கேட்க உனக்கு வாய்ப்பு இருந்தது ” என்று கண்களைத் துடைத்துக் கொண்டான்  .

“இலக்கியங்களில் சொல்வதைப் போல , எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வந்தே தீரும் போல . “

அவன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல்,  அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அவள் கன்னங்களில் முத்தமிட்டு “குட் பை மை லவ்” என்றான்.

அடுத்து வந்த ஒவ்வொரு நொடியிலும்,  அவன் இளமையாக மாறுவதை அவள் திகிலுடன் பார்த்தாள். ஒரே  நிமிடத்தில், ஒரு வயது குழந்தை அவள் கண் முன்னே  அழுதது. கடலுக்குள் தவழ்ந்து சென்று , மாண்டு விடலாம் என்பதைப்  போல, அவன்   தவழ முயன்று தோற்றுப் போனான் !

****

இருபத்தி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஏதோ ஒரு ஊரின், ஏதோ  ஒரு உணவகத்தின் , ஜன்னல் ஒர  மூலையில் இருந்த  மேசையில், யாரோ ஒருவன் , ஒருத்தியிடம் இப்படி சொன்னான். 

“வாழ்க்கை அறுபதாம் வயதில்  இருந்து தான் தொடங்குகிறது என்று, நான் நினைக்கிறேன்”

Hi, I’m tamilvalai

Leave a Reply