2023- புது ஆண்டு – புது தொடக்கம்

 அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .. 

கடந்த ஆண்டு எதையெல்லாம் செய்யப்போகிறோம் என்று  எழுதிய பதிவில் இருந்து என்னுடைய தளத்தை ஆரம்பித்திருந்தேன்.  அமோக ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. கிட்டத்தட்ட 5000 பேருக்கு மேல் அதில் படித்திருக்கிறார்கள். 

சரி, புது ஆண்டு, என்ன செய்யலாம் என்று யோசித்தால், முதலில் சென்ற ஆண்டில் எண்ணத்தை கிழித்தோம் என்பதை பார்த்தே முடிவு செய்ய வேண்டும். 

கடந்த ஆண்டின் உறுதிமொழிகள் → 2022 – புது ஆண்டு, புது தொடக்கம் – Writer Vivek 

 1. 1) உடற்பயிற்சி செய்ய முற்பட வேண்டும் ❌
 2. 2) கோபத்தை குறைக்க வேண்டும்  ❌
 3. 3) ஒரு நாலு சங்கி / உ பி / தம்பிகளை கான்டாக்க வேண்டும் ✅
 4. 4) நிறைய எழுத வேண்டும்- எழுதியதை முடிக்க வேண்டும்  (இரண்டு புத்தகங்கள் லைனில் உள்ளன) ✅
 5. 5)  #பாரா வின் எழுதுதல் புத்தகத்தையும், கிரைம் அண்ட் பனிஷ்மென்ட்,  #விஷ்ணுபுரம் நாவலையும் முடிக்க வேண்டும் ✅/❌
 6. 6) தமிழகத்திற்கு உண்மையான விடியல் வேண்டும்  ❌

படித்தவை – 

 • கிரைம் அண்ட் பனிஷ்மென்ட் – 81% 
 • பாரா – எழுதுதல் பற்றிய குறிப்புகள் – 70%
 • ஜெயகாந்தன் – ஒரு மனிதன் ஒரு வீடு  ஒரு உலகம் – 50%
 • விஷ்ணுபுரம் – 21% ( படித்ததிலேயே இது தான் கடினமானது ) 
 • சிறுகதைகள் – 20+ 

எழுதியவை 

எழுதிய புத்தகங்கள் – 

அடுத்த ஆண்டு என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்லி பல்பு வாங்க விருப்பமில்லாததால் , பொத்தாம் பொதுவாக, இதைத் தான் செய்யப்போகிறேன் 

 1. தினமும் எதையாவது எழுதுவது 
 2. ஒரு screenplay முழுவதுமாக எழுதுவது 
 3. ஆரம்பித்து அந்தரத்தில் தொங்கும் இரண்டு நாவல்களை முடிப்பது. 

கொரோனா தொந்தரவுகள் ஏதும் இன்றி இந்த 2023 அனைவருக்கும் நல்ல ஆண்டாக மாற இறைவனை பிரார்த்திப்போம் ! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *