குற்றமும் தண்டனையும் 

நடக்க நடக்க 

கால்கள் புதைகின்றன 

உதடு வெடித்து 

நா வறழ்கிறது

சருமம் உதிர்ந்து 

எல்லா தசைகளிலும் 

எரிச்சல் மிஞ்சுகிறது 

பாலைவனமும் 

வட்டமிடும் கழுகும்

ஊர்ந்தோடும் தேளும்

அரக்கு நிறப் பாம்பும் 

என்னை உணவாக்கிட

துடிக்கின்றன 

தொலைதூரக் கானல் நீரில் 

மலிந்து வாழ்ந்த வாழ்க்கையின் 

பாவங்களைக் காண்கிறேன்

Leave a Reply