மீண்டும் தாலிபன் – அட்டகாசமான ஆரம்பம்

பாராவின் ”  மீண்டும் தாலிபன் ” அட்டகாசமாக ஆரம்பித்து விட்டது , இரு அத்தியாயங்களை முடித்தவுடன் இதை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது . அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது .  

சோழியின் குடுமி சும்மா ஆடாது என்பார்கள் , அக்மார்க் உதாரணம் அமெரிக்கா . ஆனால் அவர்களுக்கே பத்து பைசா பிரயோஜனம் இல்லாத ஆப்கனில் இருபது வருடங்கள் செலவு செய்ய வேண்டிய நிலைமை, உபயம் ஒசாமா , இரண்டு ஆண்டுகளிலேயே அவன் அங்கு இல்லை என்று தெரிந்த பிறகும் வெளியேற முடியவில்லை . டூ லிட்டில் டூ லேட் என்பது தான் இதன் சாராம்சம். 

அமெரிக்காவில் பைடனை அடித்து துவைத்து கிழிக்கிறார்கள் . இடது சாரி ஊடகங்கள் அடக்கி அடித்தாலும் , வலது சாரி ஊடங்கள் இதை ஒரு தேசிய அவமானமாக சித்தரித்தாலும் , இந்த வெளியேற்றம் நடக்க வேண்டிய ஒன்றே என்று கருதுகிறார்கள். போர் அவ்வளவு செலவு பிடிக்கும். கோடி டாலர்கள் செலவு செய்து தயாரித்த போர் சாதனங்களை , உலகின் ஆக சிறந்த முட்டாள் பீஸ்களிடம் விட்டு வந்தால் கோபம் வருமா வராதா? 

இது ஒரு இஸ்லாமிய புரட்சி என்று பார்ப்பவர்கள் நிறைய பேர் இருந்தாலும், ஆங்காங்கே சில அற்புதமான எதிர்வினைகளை இஸ்லாமியர்கள் பதிவு செய்கிறார்கள். ரூலா ஏன் பிபி குல் ஆக மாற வேண்டும் என்பதில் இருக்கிறது இஸ்லாமிய அடிப்படைவாதம். இது முள்ளில் பட்ட சேலை, ஆனாலும் பாரா அவர்களுக்கு ஆல்வா சாப்பிடும் சப்ஜெக்ட் , அடங்க முடியா எதிர்பார்ப்புடன் காத்திருப்போம்! 

அடுத்த அத்தியாயங்கள் வந்தவுடன் எழுத முடியுமா என்று தெரியவில்லை , முயற்சி செய்வோம் . 

Leave a Reply

Your email address will not be published.