கவிதை

சொர்கம் 

Post Views: 65 சாவித் துவாரத்தில்  கண் வைத்துப் பார்த்தேன்  ஒய்யாரப் பூனைகளும் கம்பீர நாய்களும்  வனப்பு மிக்க மயில்களும்  ஆடித் திரிந்தன  கதவை தட்டிப் பார்த்தேன் மனிதர்களுக்கு அனுமதி இல்லை என்று பதில் வந்தது  சொத்து சுகம்  அனைத்தையும் எடுத்துக்கொள்  ஒரு ஓர இடமாவது கொடு என்றேன்  உயிரைத் தருவாயா என்றார்கள் ஒரு நொடி யோசித்தேன்  துவாரம் மூடப்பட்டது 
தமிழ்

பூக்கள்

Post Views: 82 பிணத்தைக் கொண்ட கூட்டம்  பூக்கள் தூவிச் செல்ல  மிதிபட்ட பூக்கள் நசுங்க மகரந்தம் கிட்டாத தேனீ பெரும்  சாபமிட   பல  பிணங்கள் விழுந்தன 
கவிதை

ஆழம்

Post Views: 113 எவ்வளவு நிரப்பினாலும்  ததும்பாமல்  விளிம்பில் நின்றபடி  தரை தட்டா ஆழத்தை  எட்டிபார்ற்கிறது  மனது 
Image by Alexa from Pixabay
கதை

சர்க்கரையும் மரப் பல்லியும்

Post Views: 238 “அய்யா கிளம்பிட்டாரா”, யாரும் அந்தப் பக்கம் வருகிறார்களா என்று பார்த்தபடியே  அதிகாரத்தின் அந்தியில் கேட்டாள் அன்னம்மா.  ஓரமாக தரையில்  உட்கார்ந்திருந்த சர்க்கரை ,...
கதை

குல விளக்கு

Post Views: 160 “கருப்பா இன்னிக்கே எனக்கு சாவ கொடுப்பா” என்று வேண்டிக்கொண்டேன்.நான் பேசுவது யாருக்கும் புரிந்திருக்கவோ கேட்டிருக்கவோ வாய்ப்பில்லை . வார்த்தைகள் கொழ  கொழவென வெளியே...
கவிதை

சேயோன் 

Post Views: 162 குருதியில் நனைந்த அரிவாளின் கூர் முனைகள்  அதையேந்தித் திரியும்  முறுக்கு மீசை அரக்கர்கள் பற்றியெரியும் குடிசைகள்  ஓலமிட்டபடி வெளிவரும்  தீப்பிடித்த மனிதர்கள்  பொசுங்கி...
கவிதை

கடவுளின் கூடாரம் காலி 

Post Views: 131 மார்கழிக் குளிரிலும்  ஐப்பசி மழையிலும் கால் கடுக்க  கோவில்களில் நின்றேன்   பாசுரம் பாடி  பாலாபிஷேகம் செய்து  புனுகு சாத்தி அது ஒன்றை...