கொற்றவை

சங்கிகள் சூழ் உலகில் 

மங்கிகளுகெல்லம் விருந்து..

 

 

கடவுளே வந்து , 

நான் தான் கடவுள் என்றாலும்

காயடித்து அனுப்பும் உலகமிது..

 

மொட்டு பூவாகும் முன் 

கசக்கும்  உரிமை பெற்றவர்கள்  

குழந்தைகளே..

 

சுட்டெரிக்கும் சூரியனின்

கதிர்களை இழுத்து பிடித்து 

நெல்லை விளைவிக்கும் விவசாயிக்கு

 விலை சொல்பவன் வெயிலிலே

தலைகாட்டதவனாக தான் இருக்கிறான்..

 

பல்லில்லா பாட்டியின் 

சுருங்கிய சதையை 

பல் முளைக்கும் குழந்தை கடிக்க 

இருவருக்கும் சிரிப்பு..

 

பாவமரியா பிள்ளைகளுக்கு 

தொல்லை தருபவன் 

கடவுளாக இருந்தாலும் 

அவனுக்கு நரகம் தான்..  

 

காசு தான் முக்கியம் 

என்ற  மாசுபட்ட இதயத்தை 

திருத்த வந்த மருந்தே 

குழந்தை..

 

கரும்புகை கக்கிய காரிலிருந்து இறங்கி 

சுற்றுச்சூழலை காப்பது எப்படி 

என்று பேச ஆரம்பித்தார் 

அந்த மந்திரி 

 

குடிபோதையில் தாலியை அடகுவைத்த 

கணவனின் வம்சத்தை திட்டிக்கொண்டே , 

அவர்களை காப்பாற்றி விடுமாறு  

மாரியம்மனுக்கு முடிந்து வைத்தாள் தர்ம பத்தினி

 

விட்டமின் மாத்திரையை 

விழுங்கி விட்டு 

குண்டலினி சக்தியை எழுப்புவதாக

ஊரை ஏமாற்ற கிளம்பினார் அந்த சாமியார்..

 

என்னால் முடியவில்லை 

என்ற சமாச்சாரத்தை கூட

அதை செய்துவிட்டே

சொல்கிறாள் பெண்

 

 

அம்மா மறுக்க ,

வேண்டுமென குழந்தையழ

கடவுளின்  காலில்  

கொட்டியது  தேள்

 

பொங்கலுக்கு நாள் பத்திருக்க ,

ஓசியில் கிடைத்த மஞ்சப்பையை 

மாராப்பக்கினாள் மரகதம் 

 

நிலாபிரபுவின் மகளை காதலிக்க

தெரிந்து போய் அவர்கள் 

கை காலை எடுக்க

வழியில்லாமல் இவன் தவிக்க 

கட்டிக்கொண்ட மாப்பிள்ளையுடன்  மாட்டுவண்டியில் பட்டினம் கிளம்பினாள் 

கண்ணகி

 

——

ஹைக்கூ

 

பார்க ஒருவன் வரமாட்டான

என்று ஏக்கத்துடன் காத்திருந்தது 

முதியோர் இல்லம் 

 

 

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published.