Month: November 2021

filmrajinirajnirasigantamilதமிழ்

ரஜினி எனும் மாயோன் – 1

போன வாரம் படையப்பா படம் போட்டிருந்தார்கள் , என்ன ஒரு படம் . இப்பொழுது தொலைக்காட்சியில் போட்டாலும் டி ஆர் பி யை அள்ளி தரும் அமுத சுரபியாக இருக்கிறது .முத்து / பாட்ஷா எல்லாம் இதே கேட்டகரி படங்கள் தான் .  எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.   அதே நேரத்தில் தான் அண்ணாதே படமும் ரிலீஸ் ஆகி நன்றாக ஓடியதாகவும், இல்லை சுமார் தான் என்று இரண்டு விதங்களாகவும் சொல்லபடுகிறது.  ஆனால் சில விமர்சகர்கள் கழுவி ஊத்துகிறேன் பேர்வழி என்று வன்மத்தை கக்கியும் வருகின்றனர் . இதையெல்லாம் ஒதுக்கி வைத்து ரஜினி எனும் நடிகனின், ஒரு மாபெரும் மனிதனின்  கடைசி கட்ட திரை வரலாற்றை உற்று நோக்கினால் ஒரு உண்மை புலப்படும் .  அது ஒரு சோக கதையின் தொடக்கமாகவும் அமையும் .       சரி கதையை ஆரம்பிப்போமா? பாட்ஷா படத்தில் ஒரு பாட்டு வரும். எட்டு எட்டா மனுஷ வாழ்க்கை பிரிச்சுக்கோ என்ற பாடல் தான் அது . அதில்  கடைசி எட்டிற்கு அடுத்து  retirementஐ சொல்லி இருப்பார்கள், அது இல்லையேல் நிம்மதி இல்லை என முடியும்   . ஆனால் அப்படி ஒன்றும் இல்லாத மனிதராக ரஜினி அவர்கள் மாறி விட்டாரோ என்றே தோன்றுகிறது.  படையப்பா என்னும் மாபெரும் வெற்றி படம் தான் அவரது திரை துறை கடைசி அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கிறது. அதற்கு சில வருடங்களுக்கு முன்பு தான் அவர் ஜெயலலிதா அம்மையாருக்கு எதிராக ஒரு கருத்தை சொல்லி , ஆட்சி கட்டிலில் இருந்து இறக்கி வைத்தார். அதே டெம்ப்ளேட் இந்த படத்திலும் வரும் . பொன்னியின் செல்வனில் இருந்தே மூல கதை எடுக்க பட்டதாக சொன்னாலும் , நீலாம்பரி யாரை நியாபக படுத்துகிறார் என்று யோசித்தால் விஷயம் பிடிபடும் .    ஏன் படையப்பாவில் இருந்து இந்த கட்டுரையை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்கான பதில் இது தான் . இந்த படம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது .  இந்த படத்தில் இருந்து தான் விக் அணிய ஆரம்பித்தார் ரஜினிகாந்த். அதே போல எண்பதுகளில் அவருக்கு ஜோடியாக நடித்த லட்சுமி இந்த படத்தில் அவரின் அம்மாவாக புரொமோஷன் வாங்கி இருந்தார். இது ஒரு மிக முக்கியமான பாய்ண்ட். ...
Storytamilதமிழ்

ஏழாவது குப்பை தொட்டி

அடுத்த  வேளை சாப்பாட்டுக்கு சிங்கி தான் என்பது ரவிக்கு புரிந்து  விட்டது . சுதா  ஹோட்டலில் இருந்து விழும்  எச்சில் இலைகளுக்கு பக்கத்தில், இடம் போட்டு படுத்தே விட்டான் கோபி. கால் மணி நேர தாமதத்தால் அம்மா உணவக தொட்டியையும் தவற விட்டிருந்தான் . பசி வயிற்றை பதம் பார்க்க ஆரம்பித்தது. என்னடா வாழ்க்கை இது என்று நொந்தான் . சரி கடவுள் நமக்கென்று ஒரு குப்பை தொட்டியை கூடவா ஒதுக்க மாட்டார் என்று  தேட ஆரம்பித்தான் . ஒரு ஐந்து  ரூபாய் இருந்தால் கூட புது இட்லியை ருசி பார்க்கலாம் . அதையும் திருடி, குடித்து, கவுந்து கிடந்தான் அவனது அப்பன் . கல்லை தூக்கி தலையில் போட்டு விடலாம் என்று தோன்றியது . வேண்டாம்  . சிறுவர் ஜெயிலை பற்றி அவனுக்கு இதுவரை வந்த  தகவல்கள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை . வெறும் சோற்றுக்கு ஆசைப்பட்டு அங்கு போய் குனியவேண்டுமா? சோறு கிடைக்காமலா போய்விடும். அத்தோடு அப்பன் போய்விட்டால்,  பாலத்திற்கு அடியில் இருக்கும் வீடு போய் விடும். பெருசுகளுடன் சண்டை செய்யும் அளவிற்கு தசை இல்லை. அவன் இருந்து தொலையட்டும்.. இந்த யோசனைகள் பசியை அதிகப்படுத்தின.  இதுவரை மூன்று குப்பை தொட்டிகளை பார்த்து விட்டான்.. ஒரு கருமமும் கிடைக்கவில்லை . இந்த காலத்தில் அவரவருக்கு ஒரு  சிக்கல். எப்பொழுதுமே சிக்கல்களுடன் இருக்கும் இவனுக்கு இன்னும் பல சிக்கல் . கல்யாண மண்டபமாகட்டும் , சிறு ஹோட்டல்கள் ஆகட்டும் , அனைத்தையும் மூட வைத்திருந்தது இந்த கொரோனா.  சரி குப்பை தொட்டிகளாவது நன்றாக இருக்கிறதா . கார்ப்பரேஷன் கனவான்கள் , சின்ன குப்பை தொட்டியை எல்லாம் பெரியதாக மாற்றிவிட்டார்கள். அதில் உள்ளே குதிக்காமல் ஒன்றையும் எடுக்க முடியாது. ஒரு முறை இவன் உள்ளிருந்த போது ஒரு வண்டி வந்து தூக்கிவிட்டது. குய்யோ முய்யோ என்று கத்தி தப்பித்தான். வண்டியை ஓட்டி வந்தவன் விட்ட அரையில் மூன்று நாட்கள் குயில் பாட்டு மட்டுமே கேட்டது.  அன்றிலிருந்து ஒன்று தெளிவாகியது . சிமிண்ட்டில் செய்த வட்டமான தொட்டிகளே இவனுக்கு தோது படும் என்று . ஏறி குதிக்க வேண்டாம்.  கைவிட்டு எடுத்து பார்க்கலாம். உள்ளே ஏதும் ஜந்து இருந்தால், குறிபார்த்து கல்லால் அடிக்கலாம். வெளியே நாய் இருந்தாலும் , கால் காததூரத்தில் இருந்தே துரத்தலாம்.  பசி அதிகமாகியது.ஆறு தொட்டிகளை பார்த்து விட்டான். வெறும் பிளாஸ்டிக் குப்பைகளே இருந்தன. வயிறு ரொம்பி இருந்தால், அதை எடுத்துசில காசு தேத்தலாம்.  என்ன பெரிய நகரம். குடிக்க தண்ணீர் கூட இல்லை. குப்பை தொட்டியில் சோறு இல்லை. வீட்டை தட்டி தண்ணீர் கேட்டால் கூட  அடிக்க வருகிறார்கள். எல்லா குப்பை தொட்டிகளையும் நாசப்படுத்தி வைத்திருந்தார்கள் . நாற்றம் பிடித்த மனிதர்கள்.. இவர்களுடன் எல்லாம் வாழ வேண்டுமா?  ஏன் வாழக்கூடாது என்பது போல காட்சி தந்தது அந்த ஏழாவது குப்பை தொட்டி .  இதில் மட்டும் சோறு கிடைத்தது விட்டால், முப்பாத்தம்மன் கோயில் வாசலில் இனி செருப்பு திருடுவதில்லை என்று முடிவெடுத்தான் .தொட்டியை நோக்கி விரைந்தான். ஒரு நாயும் அந்த தொட்டியை சுற்றி வர ஆரம்பித்தது. குப்பை தொட்டிக்கு அருகில் சென்றான், நாய் வல் என்றது. ஓங்கி ஒரு உதை விட்டான். வாலை சுருட்டி ஒதுங்கியது. வலியவனே இங்கு வாழ தகுதியானவன் என்பதை அன்றைய தினமும் உணர்த்தியது.  குப்பை தொட்டியில் மேலே இருக்கும், தெர்மகோலை எடுத்து பார்த்தான். மருத்துவ குப்பைகளாக இருந்தது. அவற்றை  ஒதுக்கினான் . பீசா டப்பா ஒன்று இருந்தது. அவன் கண்களில் ஒளி மின்னியது. ஏதோ ஒரு புண்ணியவானுக்கு பீசாவின் ஓரம் பிடிக்கவில்லை போல. வட்டமாக அதைமட்டும் விட்டு வைத்திருந்தான். எடுத்து உன்ன ஆரம்பித்தான். இதை போன்ற கடினமான சோற்றை உண்ணும் பொழுது நிதானம் முக்கியம் என்பதை அனுபவத்தால் அறிந்திருந்தான். மெதுவாக மென்று தின்றான். இதை மட்டுமே  தின்றால் அடுத்த நாள் காலை சங்கட பட வேண்டும்,  அதனால்  அதை ஓரம் கட்டினான். உள்ளே தோண்டி துழாவ ஆரம்பித்தான். ...
Uncategorized

நரகம் – மறுபக்கம்

 பதறியபடியே படுக்கையில் இருந்து எழுந்தான்  முகுந்த். என்ன ஒரு கோரமான கனவு ! படபடக்கும் நெஞ்சினை ஆசுவாச படுத்த தண்ணீர் பாட்டிலை தேடி எடுத்தால், அதில் தண்ணீருக்கு பதில்  ரத்தம் !  விடுக்கென படுக்கையில் இருந்து எழுந்து முகத்தை துடைக்க கையை தூக்கினால் , கை இல்லை. அதற்கு பதில்  பாம்புகள் நெளிந்தன ! விரல்களுக்கு பதில் புழுக்கள் ! தொண்டை வறண்டது .தண்ணீர் குடிக்க பிரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம் , அழுகியநிலையில் சடலங்கள் , அதில்  ஒரு பாட்டியின் சடலம் வாயை பிளந்தபடி முறைத்தது .  முகுந்திற்கு இதயத்துடிப்பு அதிகரித்து வாந்தி வருவது போல இருந்தது . உடனடியாக பாத்ரூம் சென்று வாந்தி எடுத்தால் , வாயிலிருந்து  பூச்சிகளாக கொட்டின ! பின்னங்கால்...
Uncategorized

கீரனூர் கோமதியப்பன்

கீரனூர் கிராமத்தில் இருக்கும் அறுபது குடும்பங்களுக்கும் தெரிந்தவர் கோமதியப்பன். உடனே எதோ மிராசுதாரர் என்றோ , பண்ணையார் என்றோ நினைத்துவிட வேண்டாம். அவர் ஒரு பால்காரர். பால் பாக்கெட்டை தூக்கி விட்டெரிந்து செல்லும் இளவட்டம் இல்லை. இருபத்தி மூன்று ஆண்டுகளாக அந்த ஊரில் பிறக்கும் குழந்தை முதல் , கடைசிசொட்டு பால் குடித்து  மண்டையை போடும் கிழம் வரை இவர் கொடுப்பதை தான் குடிக்கவேண்டும் . தினமும்  காலை நான்கு மணிக்கே எழுந்து , பாலை கறந்து முடித்து விடுவார் . பாலை இரண்டு அலுமினிய கேன்களில் வண்டியில் ஏற்றி ஊரையே வலம் வருவார். டீ கடைகளுக்கு கொடுக்கும் பால்  கேனில் அரை பங்கு  தண்ணீரையும் , மற்றொன்றில் கால் பங்கு   தண்ணீரை கலந்து வீடுகளுக்கும் கொடுப்பார். தாய் பால் குடிக்காத குழந்தைகள் மட்டும்ஸ்பெஷல் , கம்மியான தண்ணீர் கலந்து சப்பளை செய்வார் . ஆறு    மணிக்கு டீ கடையில் ஆரம்பிக்கும் இந்த பால் சப்பளை , ஒன்பது மணிக்கு முடியும் . முடியும் இடம் முப்பாத்தம்மன் கோவிலாக இருக்கும் .  ஊரின் நாட்டாமைக்கே ஏழே முக்காலுக்கு தான் பால் கிடைத்து , காபி கிடைக்கும் .  ஊரின் அத்துணை விசேஷங்களிலும் ஜாதி பார்க்காமல் அழைக்கப்படும் ஒரே ஆளாக கோமதியப்பன் தான் இருப்பார் . புகையிலை போடுவாரே தவிர ,   சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர் .   அதிகமாக பேச மாட்டார் , வீண் வம்புக்கு போக மாட்டார் , புறன் பேச மாட்டார். ஒவ்வொரு வீட்டுவாசலுக்கும் வந்து இரு முறை பெல் அடிப்பார்,ஆள் வரவில்லை என்றால்  அடுத்த வீடு . கடைசியாக விடுபட்ட வீடுகளுக்கு ஒரு முறை கண்டிப்பாக சென்று விட்டே வீடு திரும்புவார். மாதம் ஆறு தேதி கடந்து விட்டால் , காசு வசூலிக்க ஆரம்பிப்பார் . எப்படியும் இருபது தேதிக்குள் வசூலித்து முடிப்பார்.  அன்றும் அப்படிதான் ஆரம்பித்தார் . காலை நாலு மணிக்கு இருக்கும் ஆறு கன்றுக்குட்டிகளையும் அவிழ்த்து விட்டு பால் குடிக்க விட்டார் . ஐந்து நிமிடத்தில் வாயில் புகையிலையை போட்டு ,பால் கறக்க ஆரம்பித்தார்.. பால் கறந்து முடித்து அனைவருக்கும் சப்பளை செய்து முடித்தார் .  அன்று இரவு பால் குடித்து முடித்த  ஒருவருக்கு மூச்சு திணறல் வந்தது . இந்த செய்தி  தீயாக பரவ ஆரம்பித்தது. அடுத்த நாள் நாலு பேருக்கு வயிற்று போக்கு மற்றும் இருமல் வந்தது . டாக்டரே இல்லாத அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் இவரது பாலால் தான் பிரச்சனையோ என்று பேச ஆரம்பித்தனர் . மூச்சு திணறல் வந்த அந்த பெருசு மண்டையை போட்டது. அன்றில் இருந்து மூன்றாவது நாளில் மேலும் ஒருவர்  இறக்க , பழியெல்லாம் கோமதியப்பனின் மேல் விழுந்தது . முற்றிலும் பால் வாங்குவதையே தவிர்த்து விட்டனர்அந்த ஊர் மக்கள்.  கோமதியப்பணுக்கு அழுகையே வந்து விட்டது . எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் அந்த ஊர் மக்கள் கேட்கவேயில்லை. இவரிடம் பேச்சு கொடுக்கவே மறுத்தனர் . விரக்தியின் உச்சிக்கே சென்றார். ஒரு வாரம் கழித்து அந்த கிராமத்திற்கு வந்த அரசாங்க டாக்டர் , டோமினோ என்னும் கொடிய நோய் ஒன்று பரவ ஆரம்பித்து இருப்பதாகவும் , அது ஐக்கிய அரபு நாடுகளில்...
Uncategorized

தலைவர்டா

இது போன்ற இன்னொரு தலைவர் படம் வருமா என்றே தெரியவில்லை .. என்ன ஒரு ஸ்டைல் , என்ன  ஹேர் ஸ்டைல், தலைவன் கலக்குறாங்க .  தலைவருக்கு...