சொட்டைக்கு வந்த சோதனை

அந்த பழுத்த அரசியல்வாதிக்கு அன்று பிறந்தநாள் . அரசியல்வாதி என்றால் எதோ பெரும் கட்சியின் தலைவர் என்று யோசிக்க வேண்டாம் , இவர் அளவில் இவர் ஓரு மாவட்டத்தின் ராஜா . ஏழு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட அந்த மாவட்டத்தின் நாற்பத்தி நாலு சதவிகித மக்களின் பிரதிநிதி. அதுவும் போன தேர்தலில்  மண்ணை கவ்வ வைத்து விட்டார்கள் .. இந்த முறை ஜெயித்ததால் இவர் மந்திரி .. 

சரி விசயத்திற்கு வருவோம் , பிறந்தநாள் அதுவுமாக தலைவர் சோகமாகவே இருந்தார் , காரணம் அந்த நடிகை . அவருக்கு எப்பொழுதுமே அந்த நடிகை என்றால் அப்படிப்பட்டவள்  என்ற எண்ணம் உண்டு .. காசை விட்டெறிந்தால் வர மாட்டாளா என்ற கேவல புத்தியும் உண்டு. ஆனாலும் இந்த  வெள்ளிரிக்கா நடிகை மட்டும் எதற்கும் மசியவே இல்லை  .இன்று  அவளை அரவணைக்க இவர் செய்த திட்டமே வேறு ..

அவருக்கு சொந்தமான ஒரு நகை கடையை வேண்டுமென்றே புதுப்பித்து , அவர் பிறந்தநாளான அன்று ரிப்பன் வெட்ட அவளை அழைத்திருந்தார் .. ரிப்பன் வெட்டியவுடன், கடையிலேயே ஒரு விளம்பர படம் ஷூட்டிங், அங்கிருந்து அவளை அபேஸ் செய்து வேலையை முடிக்க திட்டம் தீட்டினார் ..

ஆனால் நடந்ததோ வேறு .. அவள் வர , ரிப்பன் வெட்ட , விளம்பர படம் ஆரம்பிக்க , படத்தில் வருவது போல இவர் அவள்  இடுப்பை கிள்ள , அவள் லவாடாவோ , மாகி ஆகோ என்று திட்ட, அது புரியாமல் இவர் முழிக்க , இயங்குனர் வேண்டாம் சார் பெரிய இடம் என்று சொல்ல , நடிகை கண்ணீருடன் யாருக்கோ போன் போட, இவர் சொட்டையில் வேர்த்து நிற்க என்று அந்த இடமே களேபரம் ஆனது .. 

பின்னணியில் பின்வருபவை நடந்தேறின .. அந்த நடிகை மும்பை தாவுத் தம்பியின் காதலியாக இருக்க , அடுத்த போன் காலில்  அவர்களின் நண்பரான முதல்வரின்  மகனை தொடர்பு கொள்ள , அரை மணி நேரத்தில் அமைச்சர் பதவி காலி. 

ஆறு மாதங்களுக்கு பிறகு அதே வெள்ளரிக்காய் நடிகையின் , அதே இடுப்பை  கிள்ளி  , இவர் வயதை தாண்டிய  ஹீரோ ஒருவன் ,  கட்டி தழுவி ஈரம் சொட்ட ஆடுவதை பார்த்து இவருக்கு கண்களில் தண்ணீர் வந்தது ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *