மணி நாலு பத்து , இன்னும் நாற்பது நிமிடங்களில் உள்ளே சென்றால் சரியாக இருக்கும் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டான் ராஜ் . வங்கியின் எதிரே இருக்கும் டீ கடையில் அமர்ந்தபடி இடதும் வலதுமாக பார்த்து காலத்தை போக்கிக்கொண்டிருந்தான். 

நேற்று பெய்த மழையின் தாக்கம் , இன்றும் அந்த ரோட்டில் தெரிந்தது . வங்கியின் வாசலிலேயே ஒரு மிக பெரிய பள்ளம், அதில் தண்ணீர் நிரம்பி ஒரு சிறிய குட்டை போல கட்சி அளித்தது. சரி மீதி இருக்கும் அரை மணி நேரத்தில் , அந்த குழியில் யாரும் வண்டியை விட்டு விழுகிறார்களா என்று பார்த்து பொழுதை கழித்தான். நேரம் போனதே தவிர ஒருத்தனும் விழ வில்லை . கடைசியாக வட்டா கட்டிங் அடித்த இளசு ஒன்று விழுவது போல வந்து , வண்டியியை எதோ ஒரு கோணத்தில் வளைத்து  தப்பித்தான். இது வேலைக்கு ஆகாது என முடிவு செய்து , பின் புறத்தை ஒரு முறை தொட்டு பார்த்து, வங்கியின் உள்ளே சென்றான்.

வாசலில் இருக்கும் வயோதிக தாத்தா இவனை ஏற இறங்க பார்த்து உள்ளே அனுப்பினார் . உள்ளே சென்றவன் அங்கும் இங்கும் பார்த்து , கேஷியர் இருக்கும் இடத்திற்கு சென்றான் . தலை குனிந்து ஒரு பெண் பணம் எண்ணிகொண்டிருந்தால் , அத்தனையும் 2000 ரூபாய் நோட்டுகள் , வலது கை அவனை அறியாமல் பின்னோக்கி சென்றது. அவள் நிமிர்ந்தாள் , இவன் அதிர்ந்தான். முன்னாள் காதலியை ஆறு வருடங்களுக்கு பின்னர் பார்க்கிறான். அவள் புன்னகைத்தாள், எதோ சொல்ல வந்தால், இவன் விடு விடுவென  வெளியேறினான். 

திட்டமிடாமல் இனி எந்த வங்கியையும் கொள்ளை அடிக்கக்கூடாது என்று முடிவெடுத்தான் .

 

Hi, I’m valaithinni

Leave a Reply