சீமான் – பாகம் 2


November 8, 1966 , ஐப்பசி மாதம் .. இந்த மாதத்தில் தான் அமெரிக்காவில் ரொனால்ட் ரீகன் கலிபோர்னியா கவர்னர் ஆகிறார், Gordon Ramsay எனும் புகழ்பெற்ற சமையல்காரர் பிறக்கிறார். ஆனால் இந்த நாள் பிரபலம் அடையப்போவது இவர்களால் இல்லை .  இந்த நாள் தமிழினத்திற்கே மிக முக்கியமான நாள். இந்த நாளில் தான் தமிழின தலைவன், சிந்தனை சிற்பி, சைனைடு குப்பி , ஆமைக்கறி வேந்தன், செந்தமிழன் சீமான் பிறந்த நாள். ஏசு பிறந்த அன்று எப்படி ஒரு நட்சத்திரம் வானில் தென்பட்டதோ, daenerys targaryen எப்படி ஓர் நட்சதிரத்தை  வானில் பார்த்தாளோ , அதே போல் சீமான் பிறந்த அன்று வானென்ங்கும், ஏன் இந்த பிரபஞ்சமெங்கும் ஒரு அற்புத ஒளி வீசியதாக , டிக் டாக்கில் ஒரு 16 வயது மதிக்கத்தக்க தம்பி கற்பூரம் அடித்து சத்தியம் செய்தார்(பி.கு. இவரின் நாடார் கிடட வம்பு பண்ணாதே என்ற டிக் டாக் பாடல் உலக பிரசித்தி பெற்றது)  . உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.. 


ஏன் என்றால் தம்பிகள் பொய் சொல்ல மாட்டார்கள்.. 


சீமான் அண்ணன் பிறந்து ஒரே ஆண்டில் தமிழை வைத்து ஆட்சி கட்டிலில் ஏறியது திமுக அதாவது அண்ணன் பிறந்து வளர்ந்து ஆறு மாதங்களில் புரண்டு படுக்க ஆரம்பிக்கும் போதே தமிழினம் வாழ ஆரம்பித்து விட்டது. இது ஏதோ அண்ணாதுரையின் தமிழால் நிகழ்ந்தது என்று நினைத்தால் , நீங்கள் தமிழர் இல்லை என தம்பிகள் முடிவு செய்து விடுவார்கள் .


எது எப்படியோ தமிழன் திராவிடன் ஆகி நாட்டை ஆட்சி செய்ய ஆரம்பித்தான் .. குழந்தையாக இருந்த அண்ணன் இதை பார்த்து வளர்ந்தார் ..  அவர்களின் அத்தனை செயல்களையும் நோட்டம் விட்டு கொண்டிருந்தார் .. சமயம் வரும்போது தாக்குவோம் என்று.. இவர் சிறுவயதில் இப்படி பொறுமையாக இருந்ததை பார்த்து தான் பிரபாகரன் அவர்கள் கொரில்லா யுத்த களையை பயன்படுத்த ஆரம்பித்தார் என்று நம்மில் கித்னா பேருக்கு தெரியும்? 


என்னடா கப்பி தனமாக பொய் சொல்லி பில்ட் அப் கொடுக்குறியே என்று நீங்கள் கேட்டால்,. உங்களுக்கு நாம் தமிழர் வரலாறு, சீமானின் வரலாறு தெரியவில்லை. 


Leave a Reply

Your email address will not be published.