arasiyal

அமீர் – ஞானவேல் – யோக்கியன் வரான் சொம்பை எடுத்து…. 

அமீர் – ஞானவேல் – யோக்கியன் வரான் சொம்பை எடுத்து…. 

எந்த ஒரு பிரச்சனையிலும் மறு பக்கம் இருக்கும். ஏதோ ஒரு பக்கம்  ஆதரவு பொங்கும், மற்றொரு பக்கம் பிளக்கப்படும் . நியாயம் ஓர் பக்கம் இருப்பதைப் போல தோன்றும் , ஆனால் உண்மையாக இருக்காது.  

அமீர் – ஞானவேல் பிரச்சனையிலும் தான் .. 

முதலில் அமீர் .. 

இங்கே அவருக்கு வரும் ஆதரவுக் குரரெல்லாம்,அவர் எப்பேர்பட்ட  இயக்குனர் தெரியுமா, இவரைப் பற்றி பேச தகுதி வேண்டாமா என்றெல்லாம் வருகிறது, ஆனால் அமீர் எப்பேர்பட்ட இயக்குனர் தெரியுமா? 

Tsotsi என்றொரு படம், அப்படியே சுட்டு யோகி என்று எடுக்கிறார். இவரின் திரைக்கதை , வசனம் , கதை மற்றும் நடிப்பில் .

அதனாலென்ன?  எத்தனையோ படங்களை காப்பி அடித்து தானே எடுக்கிறார்கள் என்று கேட்கலாம். 

அமீரின் – கதை , திரைக்கதை என்று சொல்லி விளம்பரம் செய்ய நா கூச வேண்டாம்? இவரா பெரிய இயக்குனர் ? இவரா படைப்பாளி ? இவர் சொல்வதை எப்படி நம்புவது? இவர் பணம் சம்பாதிப்பதற்காக ஏன் பருத்தி வீரனை இழுத்து விட்டிருக்க மாட்டார்? 

திருட்டு கதையை சொந்தம் கொண்டாட , உண்மையான படைப்பாளிக்கு  கூசும் தானே.. 

அப்படியே யூ டர்ன் போட்டு , தி கிரேட் கிரிகாளர் குடும்பத்திற்கு வருவோம். 

 இவர்களும் தேவ தூதர்கள் இல்லை. சத்தியவான் சிவக்குமார் அவர்கள், தன் பெரிய மகன் சூர்யா இஸ்லாமியப் பெண்ணை மணந்து விட்டார், இளைய மகன் , தமன்னா பக்கம் சாய்கிறார் என்று தெரிந்து, அவசர அவசரமாக தன் சாதியில் பெண் பார்த்து கட்டி வைத்தார் என்று அன்றைய பத்திரிகைகள் எழுதின. சரி சாதிப் பாசம் தானே என்று விட்டால்…

ஜோதிகா அக்கா, வழக்கம் போல தன் சமயமான இஸ்லாத்தில் உள்ள நிறை குறைகளை  விட்டு விட்டு , கோவிலுக்கு பதில் இதை கட்டலாம் அதை கட்டலாம் என்றெல்லாம் இந்து சமயத்திற்கு அறிவுரை தருவார்,  வீர வசனம் பேசுவார்., 

மேதகு சூர்யா மோதி அரசின் கல்விக் கொள்கைகளை எதிர்ப்பார். சரி என்று சில்லறை சிதற விட்டால், அடுத்த ஆண்டே கீழடியில் , பள்ளி மாணவர்களை வெயிலில் கால் கடுக்க நிற்க வைத்து விட்டு, உள்ளே அகழாய்வு செய்த பொருட்களை கண்டு ரசிப்பார். 

அண்ணனும் தம்பியும்  மாமன் மச்சான் பெயரில் நாலு தயாரிப்பு கம்பெனிகளை ஆரம்பித்து, அவர்களுக்கே முதலில் கால்ஷீட் கொடுத்து வாழ வைப்பார்கள். இது அப்பட்டமான சாதிப் பாசம் இல்லாமல் வேறென்ன? 

இந்த முத்துக்களை பெற்றெடுத்த சிவக்குமார் அய்யா, ஊருக்கெல்லாம் சுந்தரத் தமிழில் உபதேசம் செய்து விட்டு, எளியவனின் கைப்பேசியை போட்டு உடைப்பர். அதற்கும் சப்போர்ட் செய்ய ஆட்கள் இருப்பார்கள்.. 

இவர்களுக்குள் தான் சண்டை.

 வெறும் ஒரு கோடிக்கு என்கிறார்கள். இதெல்லாம் ஒரு விஷயமா என்றால், ஆம் விஷயம் தான். 

ஒரே காரணம் , நீ இப்படி இருக்க வேண்டும் , என்று உபதேசம் செய்பவர்கள் தன் முதுகை முதலில்  கழுவ வேண்டாமா!? 

 நீங்கள் யார் எங்களுக்கு கருத்து சொல்ல? உங்களுக்கு என்ன தகுதி உள்ளது?

இங்கே யாருக்கும் வெட்கம் இல்லை.

இங்கே யாரும் யோக்கியர்கள் இல்லை. 

பி கு. உனக்கென்ன அமீரின் மீது காண்டு என்று கேட்கலாம் – 

பருத்தி வீரன் எடுத்தவர் தான் , ஆதி பகவன் என்ற கொடூரத்தை எடுத்தார். தியேட்டரில் பார்த்து அரை நாள் தலைவலி , அந்த காண்டு தான் 

Hi, I’m tamilvalai

Leave a Reply