விசனம்

சலனத்தில்  உடைந்த 

கண்ணாடியின் சில்லுகளில்

செய்யமறுத்த உதவிகளும் 

செய்த துரோகங்களும் 

கோரப் பிசாசாக மாறி

என்னை துரத்த 

யமனோ 

ஓர் கூர் சில்லை 

கையில் திணித்து 

வேட்டையாடி வா என்கிறான்

கழுத்தும் சிரித்துகொண்டே 

வா வா என்கிறது 

Leave a Reply

Your email address will not be published.