சேயோன்
குருதியில் நனைந்த
அரிவாளின் கூர் முனைகள்
அதையேந்தித் திரியும்
முறுக்கு மீசை அரக்கர்கள்
பற்றியெரியும் குடிசைகள்
ஓலமிட்டபடி வெளிவரும்
தீப்பிடித்த மனிதர்கள்
பொசுங்கி நாற்றமெடுத்த
மயிர்ச் செண்டுகள்
நாதியற்று கிடக்கும்
அண்டாக்கள்
இவற்றின் நடுவே
ஓரக் குடிசையில்
கைம்பெண் ஒருத்தி
கருவை கலைக்க
கூரற்ற கத்தியை
வயிற்றுப் பக்கம் நகர்த்தினாள்