பசியால் கண் திறக்காமல்
தன் மொழியில் விம்மியது
கைக்குழந்தை

அப்பனும் ,
ஆட்டிப் பார்த்தான்
பாடிப் பார்த்தான்
ஆடிக் கூடப் பார்த்தான்

உன்னை யார் வரச் சொன்னது
நீ வேண்டாம் போ
குழந்தை பீறிட்டது

தலை குனிந்து
அம்மாவிடம் கொடுத்து விட்டு
கடவுளைச் சாடினான் அப்பன்

மாரைக் கொடுத்தாயே ,
பாலைக் கொடுத்தாயா

Hi, I’m tamilvalai

Leave a Reply