Category: tamil

Storytamilதமிழ்

ஐ பி சி – 354 – பாகம் – ஒன்று

இருக்கும் தெம்பை வைத்து ஒரு அரை விட்டான் முகிலன். வாயின் ஓரம் வழிந்து வரும் குருதியை தடவிப்பார்த்தபடியே ,  முகிலனை முறைத்தான், அடிவாங்கிய சுப்பு.  மறுபடியும் ஒரு அரை. ...
Storytamil

கஞ்சன்

பேருந்து நிலையத்தில் உள்நுழைந்த அந்த பேருந்து தனக்கானது  என்று நினைத்த  செல்வமணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது .  இதோ வந்துவிடும் , அதோ வந்துவிடும் என்று மூன்று  மணி நேரமாக ஒரு டீ காபி கூட குடிக்காமல் நின்றிருந்தான் செல்வமணி . மற்றும் ஒரு முறை அருகில் இருந்த டீ கடையின்அருகே சென்று டீ, காபியின் விலையை பார்த்தான் . ஒரு காபிக்கு இவ்வளவு விலையா என்று மனதில் நொந்து கொண்டான் . டீ கடைக்காரர் இவன் அடிக்கடி வருவதும் போவதுமாய் இருந்ததை பார்த்து , முறைக்க ஆரம்பித்தார் .  அப்படியே பார்வையை சுழற்றிய செல்வமணி அங்கு இருந்த  வாலிபர்களை பார்த்தான் , மிக சந்தோஷமாக புகைத்துக் கொண்டிருக்கும் அவர்களை பார்த்து எரிச்சல் வந்தது.  இன்றைய தேதியில் ஒரு சிகரெட் அடிக்க முடிகிறதா  .  ஒரு சிகரெட்டை தனியாக வாங்க முடியாதாம் , முழு டப்பாவும் வாங்க வேண்டுமாம்! , எங்கே போய் கொள்ளை அடிப்பது  .  முன்னொரு காலத்தில் ஒரு சிகரெட் ஒரு ரூபாய் இருந்த பொழுதே , ஒரு நாளைக்கு ஒன்று தான் அடிப்பான் . பின்னர் ஒவ்வொரு வருடத்திற்கும் இவர்கள் விலை ஏற்றி , கடைசியில் வாரத்திற்கு  ஒரு சிகரெட் குடித்து வந்த செல்வமணி அந்த பழக்கத்தை அடியோடு கைவிட்டான். பாக்கெட் நூற்றி இருபது ருபயாம் , எவன் அடிப்பான்  இந்த சிகிரெட்டை.  சரி பீடி இழுக்கலாம் என்றால் வாயெல்லாம் ஒரே நாற்றம் . சுருட்டு கேட்கவேவேண்டாம். இந்த சிகரெட் சிந்தனைகள் மெல்ல மறைய , மதிய பசி எட்டி பார்த்தது . ஒருவழியாக முடிவெடுத்து அந்த கடைக்காரனின் மிக அருகில் சென்று மெதுவாக “அண்ணா அரைகிளாஸ் டீ கிடைக்குமா” என்றான். ஏற இறங்க பார்த்த அந்த டீக்கடைக்காரர் கோப்பையை எடுத்து அதை முழுதும் கழுவாமல் ஏனோதானோவென்று ஊற்றித் தந்தான். மாட்டு மூத்திரம் கூட இன்னும் நன்றாக இருந்திருக்கும் போல, அதை விட கேவலமாக இருந்தது இந்த டீ. டீ தூள் போட சொன்னால் ஆட்டு புழுக்கையை போட்டு வைத்திருப்பான் போல.  கொடுக்கும் ஐந்து ரூபாய்க்கு எவ்வளவு மட்டமான பொருளைதருகிறார்கள்  என்று  அந்த  டீ கடைகாரனை மனதார திட்டிக்கொண்டு  அதை மெல்ல மெல்ல குடித்தான் செல்வமணி. ...
indiamodipoliticsStorytamiltamilanதமிழ்

மீண்டும் தாலிபன் – அட்டகாசமான ஆரம்பம்

பாராவின் ”  மீண்டும் தாலிபன் ” அட்டகாசமாக ஆரம்பித்து விட்டது , இரு அத்தியாயங்களை முடித்தவுடன் இதை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது . அவ்வளவு...
filmtamilதமிழ்விமர்சனம்

நவரசா – ஒரு துன்பியல் சம்பவம்

ரௌத்திரம் என்ற ஒரு படம் – காட்சி கீழே  அந்த பையனின் வீட்டில் மின்சாரம் போய் விடுகிறது.  தமிழகத்தில் , ஏன் இந்தியாவில் உள்ள அனைவரும் அடுத்து...
Storytamil

காடும் பாம்பும்

இது ஒரு சுமாரான கிராமம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக , அட்டகாசமான ஒரு காடாக இருந்து, இன்று சுமாரான கிராமமாக மாறிய காடு . முதலில் வந்த...
Moviestamilவிமர்சனம்

சார்பட்டா பரம்பரை –

சார்பட்டா பரம்பரை – இதே மண்ணில் ஆயிரம் ஆண்டுகாலமாக உழைத்து, இந்த மண்ணை கட்டமைத்த  மக்கள் முன்னேற  தான்  எத்தனை தடைகள். எத்தனை வன்மம் என்பதே இப்படத்தின்...
Storytamil

வழுக்கயா ஒரு இளநி

காலை ஆறு மணிக்கே எழும் பழக்கம் கொண்ட சுந்தரம், எழுந்ததும் தலை முடியை  சரி படுத்திகொண்டு தான் அடுத்த வேலைக்கே செல்வார். இதை படித்தவுடன் சுந்தரத்திற்கு எதோ...
Storytamil

நூல்

ஏசி குளிரூட்டப்பட்ட அந்த அறையில் ஏழு பேர் அமர்ந்திருந்தனர், ஒரு நவ நாகரீக பெண் சரளமாக ஆங்கிலத்தில் எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள். ஆறு பேருக்கு அவள் சொல்வது...
Storytamil

கழுகார்

 அது ஒரு கழுகு, கழுத்தில் வெள்ளை அடித்தார் போல இருக்கும் மாநிற கழுகு. அதற்கு  வானமே எல்லை.. காடும் நாடும் நதியும் ஒன்றே. சாதி இல்லை என்றாலும் ஜாதி உண்டு.. அதன் சுதந்திரம் அளப்பறியாதது . பாஸ்போர்ட் போன்ற வஸ்துக்கள் இல்லாமல் கண்டங்களை கடந்து பறந்து செல்லலாம்  . பாகிஸ்தான் வழியாக தாலிபான்களின் குடியிருப்பின் அருகே டேரா போட முடியும். யாரும் போக முடியாத அந்தமான் தீவின் சந்துபொந்துகளை அளக்க முடியும். என்ன அங்கே இன்றும் வாழ்ந்து வரும் காட்டுவாசிகளிடம் சிக்காமல் இருக்க வேண்டும். சிக்கினால் வறுவல் தான் ..  இன்றும் ஆதி மனிதனாகவே இருக்கும் அந்த மடையர்களுக்கு நடமாடும் எதை கண்டாலும்உணவே .. அந்த கழுகின் மூதாதையர்களின் கூற்றின்படி , மனிதர்கள் ஒன்று கழுகைஉண்பார்கள் இல்லை பயப்படுவார்கள் .  ஆசிய கண்டத்தில்  , சற்று வடக்கே சென்றால்சப்பை மூக்கு மக்களின் உணவாகவும் வாய்ப்பு உள்ளது . சரி சற்று தெற்கே பாரத கண்டத்திற்கு பறந்தால் அங்கே இருக்கும் சில கூமுட்டைகள் , கழுகை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள் . .. மேலிருந்து அவர்களை பார்ககும்போது சிரிப்பு வரும்.. ஆதி மனிதன் தான் , தனக்கு எது புரியவில்லை என்றாலும், அதற்கு பயந்து, அதை வழிபட ஆரம்பித்தான் என்றால் , இத்தனை ஆயிரம்ஆண்டுகள் கடந்தும் இதை செய்யும் மனிதர்களை என்ன சொல்வது ? அதிலும் மின்னல் , இடி போன்றவற்றை  கிரேக்க மக்கள் கடவுள் ஆக்கினால் , ஆசிய கண்டத்தில் பசு மாடும் , யானையும் கடவுளாம் . எருமை மாடு என்ன பாவம் செய்தது.. இதில் யானைகளை பிச்சை எடுக்க வைத்து இவர்கள் படுத்தும் பாடு கொடுமையானது. இதை விட மேலாக ஒரு பசுமாட்டை வைத்து இவர்கள் செய்யும் கூத்து , இவ்வுலகில் யாரும் செய்ய துணியாதது .  ஒரு உயிரினத்தின் ஆக முக்கியாமான பணிகள் இரண்டு . ஒன்று உணவு உண்பது , மற்றொன்றுஅதை வெளியேற்றுவது  . ஆனால் இந்த பாரத தேசத்தில்  ஒரு மாட்டினாள் நிம்மதியாக சிறுநீர் கழிக்க கூட முடியவில்லை , சொம்பை தூக்கிக்கொண்டு துரத்துகிறார்கள். மிருகமாகவே இருந்தாலும் ஒரு எல்லை வேண்டாமா..  நல்ல வேளை கழுகு மூத்திரத்தில் ஒன்றும் இல்லை, அல்லது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை .. கண்டுபிடித்தால் என் நிலைமை கஷ்டம்.