குறிலெனும் குந்தாணி
“சார் இப்ப தான் குமரகுருபனை பாத்துட்டு வரேன், ஏன் இப்படி உர்ர் ன்னு உக்காந்து இருக்கார். எப்பவும் கலகலப்பா பேசுவாரே ? என்னாச்சு?” என்று விசாரணையை ஆரம்பித்து வைத்தார் ரங்கன். அடுத்தவர் அந்தரங்கத்தில் களிப்பவர். இப்படி ஒரு விஷயம் கிடைத்தால் விட்டுவிடுவாரா.
“அதுவா, நேத்திக்கு முதலமைச்சர் கூட்டத்தில் பேசுறதுக்கு இவர் தான் எழுதி தந்தார்” .. இது ராஜ முத்து.. வேண்டா வெறுப்பாய் பதில் தந்தாலும் , விஷயம் தெரிந்தவர் .
“தமிழ்ல எழுத இவருக்கு சொல்லியா தரணும் ? ஜம்முனு எழுதிக் கொடுத்திருப்பாரே ?“
“ஆமா , ஆறு பக்கத்துக்கு அட்டகாசமா எழுதி கொடுத்திருந்தார். “
“அப்புறம் என்னாச்சு” .
என்ன ஆவுறது, கூட்டம் முடிஞ்சு வீட்டுக்கு போற வர முதலமைச்சருக்கு ஒன்னும் தெரியல. அவங்க வீட்ல மாப்ள வாட்சப் வீடியோ போட்டு காமிக்க, அவரு கடுப்பாகி இவர சஸ்பெண்ட் பண்ணிட்டார்.எதிர் கட்சிக்காரன், ஏதேதோ பின்னாடி மியூசிக் எல்லாம் சேர்த்து ஊர் புல்லா அந்த வீடியோவ ஷேர் பண்ணிக்கிட்டு இருக்காங்க.
“அடடா, நல்ல தமிழ் வாத்தியார் ஆச்சே, அதனால தானே ரிடையர் ஆனதுக்கு அப்புறம் கூப்டு வேல போட்டு கொடுத்தாங்க.”
“என்னத்த கொடுத்தாங்க, சம்பளமும் இல்ல, ஒன்னும் இல்ல. இவர் எழுதின வச்சு தான் ஆட்சிய புடிச்சாங்க, பத்து பைசா பிரயோஜனம் இல்ல.”
“ஏதாவது ஒரு வாரிய பதவி கூடவா கிடைக்கல.”
“அட போப்பா , உள்ள இவர் கிட்ட ஓசில டீ காபி வாங்கி குடிச்ச ஆள் தான் அதிகம். அப்பிராணி ஒன்னும் கேட்கத் தெரியல.”
“இவரே கைப்பட எழுதி கொடுத்ததா..”
“ஆமா , ஆறு பேப்பர் , பெரிய சைஸ் எழுத்து, மார்ஜின் கோடெலாம் போட்டு கொடுத்ததா சொன்னார் . ஆனா அவர் தப்பு செஞ்சு யாருமே பார்த்ததில்லை. அதான் மனுஷன் உடைஞ்சு போயிட்டார். “
“ஒருவேளை வேற யாரும் காப்பி எடுக்கும் போது பிரிண்டிங் மிஸ்டேக் ஆகிருக்குமோ ? “
“இல்ல பெரியவர் தப்பா படிச்சிருப்பாரோ?”
“தெரியலையே” , என்று நொந்து கொண்டார்.
சரி, மெய்ன் விஷயத்தை விட்டுட்டேன் பாருங்க, அப்படி என்ன தப்பு பண்ணிருக்கார்?
என்ன, “கோட்டைகளை தகர்ப்போம்” னு முடிய வேண்டிய இடத்துல , “கோ” க்கு பதிலா…
To read other stories, click here – https://writervivek.com/category/கதை/