கவிதை

இருகப்பற்று

ஜனவரி மாத ரயில் பயணம்

சில்லென்ற காற்று

கையில் தேநீர் கோப்பை

எதிரில் எங்கோ பார்த்த முகம்

புன்னகைகள் பரிமாறின

ஊதா அவனின் ஆத்ம நிறமானது

ஒரு தேநீர் கோப்பை இரண்டானது

இனி இந்த வாழ்வே

அவ்விரு கோப்பைகளை

பிரியாமல் பார்த்துக் கொள்ளத்தான்

Hi, I’m tamilvalai

Leave a Reply