சாவித் துவாரத்தில் 

கண் வைத்துப் பார்த்தேன் 

ஒய்யாரப் பூனைகளும்

கம்பீர நாய்களும் 

வனப்பு மிக்க மயில்களும் 

ஆடித் திரிந்தன 

கதவை தட்டிப் பார்த்தேன்

மனிதர்களுக்கு அனுமதி இல்லை

என்று பதில் வந்தது 

சொத்து சுகம் 

அனைத்தையும் எடுத்துக்கொள் 

ஒரு ஓர இடமாவது கொடு என்றேன் 

உயிரைத் தருவாயா என்றார்கள்

ஒரு நொடி யோசித்தேன் 

துவாரம் மூடப்பட்டது 

Hi, I’m tamilvalai

Leave a Reply