தமிழ்

யுத்தமும் தண்டனையும்

கார்மேகங்கள் சூழ

ஜில்லென்ற தென்றல் வீச

மரங்கள் தலையாட்ட

பூக்கள் அசைந்தாட

தேனீக்கள் ரீங்காரமிட

சட்டென்று தரை அதிர்ந்தது

ஓடி விளையாடிய

குழந்தைகள் சரிய

கைகள் பத்தாமல்

கிடைத்ததை அள்ளிக்கொண்டு

பாதாள ஆஸ்பத்திரிக்கு

ஓடினாள் அந்தத் தாய்

அடுத்த குண்டு

அந்த ஆஸ்பத்திரியை

நோக்கி விரைந்தது …

Hi, I’m tamilvalai

Leave a Reply