கவிதை

கடவுளின் கூடாரம் காலி 

மார்கழிக் குளிரிலும் 

ஐப்பசி மழையிலும்

கால் கடுக்க 

கோவில்களில் நின்றேன்

 

பாசுரம் பாடி 

பாலாபிஷேகம் செய்து 

புனுகு சாத்தி

அது ஒன்றை மட்டும்

கொடுத்துவிடு என்றேன் 

கடவுளின் கூடாரம் காலி 

என்று பதில் வந்தது

அட போப்பா 

என்று நடையை கட்டினேன்

அடுத்த நாள் 

அது கிடைத்தது 

Hi, I’m tamilvalai

Leave a Reply