தமிழ்

கொக்கரக்கோ கும்மாங்கோ

சூரியன் தன் வேலையை முடித்துவிட்டு,பாய் படுக்கையுடன் கொட்டாவி விட்டு, மறையைத் துடிக்கும்  சமயமது. சூரியனின் வெளிச்சமே எங்களுக்கு தேவையில்லை என்று  நியான் விளக்குகளும், மினு மினுக்கும் எல் இ டி பல்புகளும் அந்த மாலை நிரந்தர மதியத்தில் வைத்திருந்தன. கொக்கரக்கோ அந்த மாலின் இரண்டாவது தளத்தில் இருந்த படியே நோட்டம் விட்டார். தரை தளத்தில் இளம் கன்னிகள் கிறிஸ்துமஸ் மரத்தின் முன் ஆடிக் கொண்டிருக்க , முதிர் கன்னிகள் கூட்டம்  ஓரமாக போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேரில் சாய்ந்த படி, அல்லேலூயா பாடிக்கொண்டிருந்தார். மரத்தின் முன் இருந்த சாண்டா தாத்தா, சிறுவர்களை மடியில் உட்கார வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். மலேசியா ஒன்றும் கொக்கரக்கோவிற்கு புதிதல்ல என்றாலும் , அங்கே இதுவரை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைப்  பார்த்ததில்லை. இவ்வளவு படோபகாரமாக கொண்டாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கவில்லை. இஸ்லாமிய தேசமாக இருந்தும் சரக்கும் , முறுக்கும், மற்ற மதப் பண்டிகைகளும் குதூகலமாக கொண்டாடப் படுகின்றன.  சரக்கு கிடைக்கும் இடமெல்லாம் சொர்கமே என வாழ்ந்து வரும் கொக்கரக்கோ அந்த இடத்தை விரும்பாமலா இருப்பார் .

அடித்த மூன்று பியரின் போதை இறங்க ஆரம்பித்தது. கன்னிகளின் மேலழகை உயரத்தில் இருந்து ரசித்த போதையும் தரை தட்டியிருந்தது. அடுத்த பியருக்கு முன்னால் ஒரு  சிகரெட் பிடித்து அந்த மந்த நிலையை நீடிக்க முடிவெடுத்தார்.  லிப்டை நோக்கி திரும்ப சடாரென்று திருப்பியவர் எதிர்வரும் கணினிகளின் கூட்டத்தில் ஒருத்தியை மட்டும் நேருக்கு நேர் இடித்து, இருவரும் கீழே விழ, அந்தக் கன்னிகள் அவளை மட்டும் எழுப்பி விட்டு , இவரை அப்படியே இரு நொடிகள் பார்த்துவிட்டு, அவர் எழுவதை நின்று பார்த்துவிட்டு  சென்றனர். எழுப்பி விட்டு சென்றிருக்கலாம், ஆனால் அக்கூட்டத்தில் முக்கால்வாசி புர்கா அணிந்த பெண்கள், உதவி செய்கிறேன் என்று கை கொடுத்து பிரச்சனை ஆகாமல் போனதே என்று அவரும் விட்டுவிட்டார். மூன்றாம் மாடியிலேயே புகை பிடிக்க இடம் இருந்தும், சகுனம் சரியில்லை என்று முடிவெடுத்தவர் தரை தளத்திற்கு செல்ல பொத்தானை அமுக்கினார்.

லிப்ட்டில் ஏறிய நேரம், கால் வந்தது. மறுமுனையில் சீனி. இவருக்கு கொக்கரக்கோ என்று பெயர் வைத்ததே சீனி தான்.  வீட்டில் மனைவி இல்லாத நேரமாக பார்த்து கால் செய்கிறார் போல என்று நினைத்துக் கொண்டே பேச ஆரம்பித்தார். கொக்கரக்கோ  எடுத்து வரும்  “தி வெளியாள் “ படத்தின் அடுத்த ஷெட்யூல் பற்றி ஆரம்பித்த பேச்சு , உமையாள்புரம் விருது, எதிரணியில் எப்படி நடந்து கொள்வது, எத்தனை பாட்டில் தண்ணீர் வாங்க வைத்தால் சரி படும் என்று முடிந்தது . அதுவரை லிபிட்டிலேயே இருந்த கொக்கரக்கோ, அது தரைக்கு வந்து, மறுபடியும் மேலேறி விட்டதை தவற விட்டிருந்தார். கதவு திறந்தது, எதிரே அவரை இடித்த அதே பெண். அவள் உள்ளே வரலாமா என்று யோசித்துக்கொண்டே இருக்க, கதவு மூட ஆரம்பித்தது. கொக்கரக்கோ ஸ்டைலாக காலை விட்டு அதை நிறுத்தி , “டூ யு வான்ன கம் இன் “ என்றார். அவளுக்கு இந்நேரம் பியரின் வாடை அவளை சென்றடைந்து இருக்கும். இருந்தும் உள்ளே வந்தாள் , ஒரு புன்னகையுடன் .

“ஐ ஆம் சாரி அபௌட் ஏர்லியர்” என்று இருவரும் ஒரே நேரத்தில் பேச, இடைவெளி விட்டு சிரித்தார்கள். 

“ஆர் யு பிரேம் ஹியர் “ என்று கொக்கரக்கோ ஆரம்பிக்க, அவளோ, நான் சென்னை என்று சொல்ல, பேச்சு , உரையாடலாக மாறியது. 

வேலைக்காக இங்கே வந்திருக்கிறாள் . சிட்டி பாங்கில் வேலை, வார இறுதியில் மால் , ஷாப்பிங் என்று ஓடும் வாழ்க்கை. கொக்கரக்கோ ஒரு எழுத்தாளர் என்பதை அறிந்த அவள் , தான் படித்த நோரா ராபெர்ட்ஸின் நாவல்கள் பற்றி பேச்சை  மாற்ற, இங்கே சீனி இருந்திருந்தால் , இன்னும் நூறு எழுத்தாளர்களை அவளுக்கு அறிமுகம் செய்திருப்பார் என்று தோன்றியது. தரை தளத்தில் லிப்ட் நிற்க இருவரும் பிரியத்  தயார் ஆனார்கள், எதோ ஒன்று கொக்கரக்கோவை “டூ யு வாண்ட் டு ஸ்மோக் “ என்று கேட்க வைத்தது. 

அவளுக்கு அந்தக் கேள்வி சிறு அதிர்ச்சியை தந்தாலும் , “ ஐ வாண்ட் டு ட்ரை, பட் ஐ  காண்ட் “ என்றாள். இருவரும் ஏன் தமிழில் பேசிக்கொள்ளவில்லை என்று யோசிக்கவும் இல்லை. 

“நான் உன்னை மறைவான இடம் ஒன்றிக்கு கூட்டிச் செல்கிறேன் “  என்று தமிழில் சொல்வது கொக்கரக்கோவிற்கு மொக்கையாகப் பட “ஐ கேன் டேக் யு சம் வேர் , யு டோன்ட் ஹவ் டு ஒர்ரி” என்றார். ஆங்கிலம் அந்த உரையாடலை ஒரு படி உயர்த்தியதாக தோன்றியது .

அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்தபடி ஒரு தோட்டத்தின் நடுவே இருந்த புல் தரையை தேர்ந்தெடுத்தார் . அவளோ  யாரும் இல்லா இடம் தானா என்று இரண்டுக்கு மூன்று முறை உறுதி செய்து கொண்டாள் .  

கொக்கரக்கோ சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து, இரண்டு இழுப்பு இழுத்தார் .  

அவளுக்கும் ஒரு சிகரெட்டை நீட்டினார் .

அவளோ, நான் இழுக்கப் போகும் ஓரிரு இழுப்புக்கு புது சிகரெட் வேண்டாம் என்றாள் .

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு உலகை எப்படி எல்லாம் மாற்றி விட்டது என்ற சிந்தனை எட்டிப் பார்க்க, புன்னகைத்தபடியே அவளுக்கு சிகிரெட்டை நீட்டினார். 

அவள் சிகரெட்டை வாயில் வைத்த தருணம் , டக டக என்ற சத்தம் கேட்டு இருவரும் திரும்பினார்கள். கார்டனிங் செய்ய இரண்டு இளைஞர்கள் அங்கே வந்திருந்தனர். ஒருவன் புல் புடுங்க மற்றொருவன் செடிகளுக்கு ஷேவிங் பண்ண ஆரம்பித்திருந்தான். 

அந்த இருவரும் , இந்த இருவரைப் பார்க்க, அவளோ அவசரமாக சிகிரெட்டை மறைக்கப் பார்க்க, வாயில் இருந்து புகை கசியத் தொடங்கியது. அதில் ஒருவன் தன போனை எடுத்து, அவளை வீடியோ எடுக்க ஆரம்பித்தான். கொக்கரக்கோவிற்கு கோவம் வந்து விட்டது. 

ஓடிப்போய் அவன் செல்போனை புடுங்க, அதில் ஒரு வீடியோ கால் ஓடிக்கொண்டிருந்தது. சற்றே ஸ்தம்பித்த கொக்கரக்கோ என்ன நடக்கிறது என்று அவனிடம் கேட்க அவன் சொன்னான். 

சார் எங்கள் நாட்டில் பெண்கள் சிகரெட் பிடிக்க மாட்டார்கள்.பிடித்தால், சவுக்கடி, கல்லடி என்று  முகத்தை பெயர்த்து  விடுவார்கள்.  நானே உடலுறவு கொண்டவுடன் ஒரே ஒரு சிகரெட் அடிப்பான்.  அப்போதெல்லாம்  என் மனைவிக்கு சிகரெட் பிடிக்க ஆசை வரும் , ஆனாலும் தயக்கம். அதை உடைக்கத் தான் , இங்கே இந்தப் பெண் புகைப்பதை காண்பிக்க முயன்றேன் என்றான். 

இனிமேல் யாரை வீடியோ எடுத்தாலும் சொல்லிவிட்டு எடு என்று மிரட்டிவிட்டு கொக்கரக்கோ அங்கிருந்து நகர்ந்தார். அந்தப் பெண்ணோ – இனி இங்கே என்னால் புகைக்க முடியாது என்று பயத்துடன் சொன்னாள்.

அதனால் என்ன, என் ரூமிற்கு சென்று புகைக்கலாம் என்றபடி சிரித்தார். அவளும் தான். அங்கே சென்று அவர்கள் வெறும் புகையுடன் விட்டார்களா , என்பதை உங்களின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன். 

Hi, I’m tamilvalai

Leave a Reply