ஆண்டி
ஒரு ஊரில் ஒரு ஆண்டி(aunty அல்ல ) இருந்தானாம்
அவன் முன் ஒரு தேவதை தோன்றி உனக்கு என்ன வேண்டுமோ கேட்டுக் கொள் என்றாலாம்
நான் இந்த தேசத்தின் ராஜா ஆக வேண்டும் என்றான் அந்த ஆண்டி
ஆகட்டும் என்று மறைந்தால் தேவதை
அந்தப் புறத்திலும் அறுசுவை உணவிலும் திளைத்த ராஜாவிற்கு ஒரு நாள் இந்தஅரசாங்கம் எப்படி நடக்கிறது , எங்கிருந்து பணம் வருகிறது என்ற யோசனை வந்ததாம்
மந்திரியை அழைத்து கேட்டானாம்
அதற்கு மந்திரி சொன்னானாம்
அரசே , நாமே ஊர் மக்களிடம் வரிப் பணம் வாங்கித்தான் வண்டி ஒட்டுகிறோம் என்று
அப்போது தான் ராஜாவிற்கு உரைத்ததாம் இங்கே எல்லோரும் ஆண்டி தான் என்று
ராஜா ஆண்டியாக உணர்ந்தானாம்