நிழல் 

நிழல்

நீர்த்துப்போன மனிதன் 

நிழலைக் காணாது கவலையுற்றான்


உன் பாவங்களைக் களைந்து விட்டேன் போ என்றான் சித்தார்த்தன் 


நக்கிப் பிழைத்தே வாழ்ந்தவனுக்கும் நஞ்சுள்ளம் கொண்டவனுக்கெல்லாம்

நிழல் தெரிகிறதே 

என்றான் மனிதன் 


காற்றுக்கும் 

நீருக்கும் 

நிலவுக்கும் 

இரவுக்கும்

மனதிற்கும்

கனவுக்கும்

உறவுக்கும்

நிழலில்லை , 

இனி உனக்கும்தான் என்றான் சித்தார்த்தன்  


மனிதன் மறைந்தான் , நிழலற்ற கவலையுடன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.