ராம ராஜ்யம்
“எந்த ஒரு நாட்டில் இளவரசர்களையும் , ஏழைகளையும் ஒரே மாதிரியாக , சரி சமமாக நடத்துகிறார்களோ, அங்கு நடப்பதே ராம ராஜ்யம்” – சொன்னது கரம்சந்த் காந்தி .
அகண்ட ராம ராஜ்ஜியத்தை அமைத்தே தீருவோம் என்று மார்தட்டி , தேர்தல் நடந்த நூறு நாட்களும் விலையெற்றாமல் , அதன் பிறகு தினமும் – எண்பது காசு உயர்த்தும் கனவான்களிடம் யாராவது இதை சொல்வார்களா ? அவர்களே ஒத்துக்கொண்டாலும் – “அட யாரப்பா நீ – ராமருக்கே எது ராம ராஜ்யம் என்று கத்து கொடுத்தது ‘ஜி’ தான் தெரியுமா” என்று விடாது கருப்பாய் துரத்தும் இவர்களைக் கண்டால் , ராமரே சற்று திகைத்துத்தான் போவார்.
பி.கு. செய்தி – பணக்கார பிச்சைக்காரரான அதானியின் 12 ஆயிரம் கோடி கடனை , வராக்கடன் கணக்கில் சேர்த்து எஸ் பி ஐ வங்கி.
#RamNavami