தமிழ்

டாணாக்காரன்

மாறன் என்ற வரலாற்று சிறப்பு மிக்க உன்னத காவியத்தை பார்த்ததில் இருந்தே ஹாட்ஸ்டார் ஓடிடி என்றால் காத தூரம் ஓடி விடுகிறேன் . அவர்களின் டிராக் ரெக்கார்டு அப்படி . ஆனாலும் டாணாக்காரன் என்ற பெயரும் , மேலோட்டமாக பார்த்த விமர்சனங்களும் இரண்டு நாட்களாக ஹட்ச் டாக் போல துரத்தியதால் ஆரம்பித்தேன். 

ஆரம்பத்திலேயே போலீஸ் அகாடமியின் வரலாற்றில் ஆரம்பித்து , நாற்பது வயதில் போலீஸ் டிரெய்னிங் வரும் அங்கிள் என்று நம் கவனத்தை ஈர்த்து விட்டார் . அங்கிருந்து நமக்கு  போலீஸ் டிரெய்னிங் என்றால் என்ன , அதிகாரம் என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்று நேர்கோட்டில் தகவல் சொல்கிறார். 

இப்படிப்பட்ட படங்களில் இரண்டு விசயங்கள் தவறாமல் இருக்கும் ஒன்று , ஹீரோவிற்கான காரணங்கள் . அவன் ஏன் போலீஸ் ஆக துடிக்கிறான் என்பது .முக்கால் வாசி நேரம் இது ஒரு எமோஷனல் பின்னணி கொண்டிருக்கும் . அடுத்து அவன் சந்திக்கும் சவால்கள் . இறுதியில் ஹீரோ வென்றே தீருவான் என்று தெரிந்தே பார்க்கும் நமக்கு , அவன் சாவல்களை எப்படி எதிர்கொள்கிறான் என்பதில் தான் சுவாரசியம் இருக்கும் .

இந்த இரண்டு காரணங்களுக்கும் முடிந்த வரை வேலை செய்திருக்கிறார் இயக்குனர். விக்ரம் பிரபு நடிக்க முயற்சி செய்திருக்கிறார் . சில துணை நடிகர்கள் கவனத்தை ஈர்க்கிறர். 

இப்படிப்பட்ட படங்களுக்கு காதல் எல்லாம் எக்ஸ்ட்ரா என்றே தோன்றியது .

கால் மணி நேரத்திற்கு ஒரு முறை வரும் அபௌட் டர்ன், ஸ்டாண்ட் அட் இஸ் , பெரிய அளவில் சுவாரசியம் இல்லாத ஒரு திரைக்கதை, திடீரென்று சரியாக பரேடு எடுக்கும் அங்கிள்ஸ்  , படத்தின் முடிவு என்று சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. 

ஆனாலும், திராவிட அரசியல் பேசி கிளிஷே ஆக்கமால்  , பெரிதும் காட்டாத ஒரு தளம் , அதற்கு வலு சேர்க்கும் உண்மை சம்பவங்கள் என்று நல்ல படத்தை தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் .

வாழ்த்துக்கள்.

Hi, I’m tamilvalai

Leave a Reply