சீமான் – வினையும் எதிர்வினையும் -பாகம் 1
LTTE , பிரபாகரன் மற்றும் சீமான்
ஈழத்தமிழர்களை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது என்பது, தமிழில் அ..ஆ கற்பதற்கு சமம். ஆண்டுக்கு 12 மாதம் என்றால், தமிழக அரசியலில் 2 மாதம் காவிரிக்கும் 1 மாதம் ஈழத்தமிழர்களுக்கு என்று பிரித்த்து வைக்கப்படும் . பல ஆண்டு காலங்களாக இந்த அரசியல் செய்யப்பட்டடு வருகிறது. கருணாநிதி, MG ராமச்சந்திரன், ஜெயலலிதா என்று முதல்வர்களில் ஆரமித்து, சத்தியராஜ் போன்ற occasional போராளிகள் வரை, இதற்க்கு விதிவிலக்கல்ல. இதை மட்டுமே வைத்து அரசியல் செய்பவர்களும் உண்டு, உதாரணம் வைகோ. ஈழத்தமிழர்களை பற்றி இவர் பேசாத இடமில்லை, போராடாத இடமில்லை என்றாலும், இதனால் இவருக்கு என்ன கிடைத்தது என்றால், பெரிதாக ஒன்றும் இல்லை என்றே சொல்லவேண்டும்.
வைகோ ஒரு எமோஷனல் ஆன மனிதர், அரசியலில் எமோஷன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாக இருந்தாலும், வைகோவின் பல முடிவுகள், முக்கால்வாசி நேரங்களில் தோல்வியிலும் , சோகத்திலுமே முடிந்திருக்கிறது. இவர் போன தலைமுறை அரசியல்வாதி என்பதால் , இவரால் இணையத்தளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. இது தான் திருமுருகன் காந்தி, சீமான் போன்றோரின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது.
பிரபாகரனின் போராட்டங்களை ஒதுக்கி வைத்து பார்த்தல் , அவரை பற்றி ஆயிரம் கதைகள் உண்டு, முக்கால்வாசி வன்முறை தான். 1990களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்டங்குடி படுகொலை, ராஜிவ் காந்தி படுகொலை என்று சொல்லிக்கொண்டே போகலாம். உண்மை இப்படி இருக்க, தமிழக இஸ்லாமியர்கள் பிரபாகரனுக்கு ஆதரவு தெரிவிப்பதெல்லாம் காமெடி.
இதைவிட பெரிய காமெடி, அண்ணண் சீமானின் பிரபாகரன் சார்ந்த கதை மற்றும் திரைக்கதை. இது அண்ணாவின் ஒரு முகம் தான்.
அடுத்து வருவது ….
சீமான் எனும் தமிழ் தலைவன்..