2024 எலக்சன் – 2
அமெரிக்க தேர்தல் அரசியல் பாகம் 1 இங்கே படித்துவிட்டு வரவும்.
அமெரிக்காவில் தேர்தல் ஜுரம் உச்சகட்டத்தை எட்ட ஆரம்பித்துள்ளது.
நவம்பர் ஐந்தாம் தேதி தேர்தல். 7 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்தால், 7:01இல் இருந்து வாக்குகளை எண்ண ஆரம்பித்து விடுவார்கள்(இந்த நேரம் மாநிலத்துக்கு மாநிலம் மாறும்) . எப்படியும் அன்று இரவோ, அடுத்த நாளோ, இல்லை ஒரு வாரத்திலோ யார் அதிபராகப் போகிறார்கள் என்று தெரிந்துவிடும். யார் வெல்வார்கள் என்று சுலபமாக கணிக்க முடியாத ஒன்றாக இந்தத் தேர்தல் உள்ளது.
இது ஒரு வகையில் உலகத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகும் தேர்தல் . அதேநேரத்தில்
- அமெரிக்கா ஒரு பெண்ணை அதிபராகத் தேர்ந்தெடுத்ததே கிடையாது
- அமெரிக்கா ஒரே ஆண்டில் இத்தனை லட்சம் இல்லீகல் இம்மிகிரன்சை(அகதிகள்) உள்ளே அனுமதித்ததும் கிடையாது
உலகில் இன்று யுத்தத்தில் உள்ள பல நாடுகளுக்கு, இந்தத் தேர்தல் , வாழ்வா சாவா என்று தீர்மானிக்கும் ஒன்று.
நிலைமை இப்படி இருக்கையில்,எல்லாவற்றிலும் பணம் பார்க்கும் அமெரிக்காவின் பணக்கார வர்கம், இந்த எலக்ஷனை வைத்தும் பணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பல மாநிலங்களில் நீங்கள் லீகலாகவே பெட்டிங் செய்யலாம். அது அரசியல் சார்ந்த தாகவும் இருக்கலாம்.
டிரம்ப் v கமலா, யார் ஜெயிப்பர்கள் என்றும் பெட் கட்டலாம். விடுவார்களா பண முதலைகள். ஆரம்பித்து விட்டார்கள்.
தற்போது இந்த பெட்டிங்கில் ட்ரம்ப் முன்னணியில் உள்ளார்.
நீங்கள் ட்ரம்புக்கு ஆதரவாக 60 பைசா கட்டி,அவர் ஜெயித்தால் உங்களுக்கு ஒரு ரூபாய் கிடைக்கும். கமலா ஹாரிஸ் ஜெய்த்து விட்டால் மொத்த அறுபது பைசாவும் சுருட்டிக் கொண்டு போய்விடும். எல்லாவற்றையும் போல் அமெரிக்கர்கள் இதிலும் பணத்தை போட்டு தங்களின் ஆதரவாளர் ஜெயிக்க வேண்டும் , அதில் நாமும் காசு பார்க்க வேண்டும் என்று களம் இறங்கியுள்ளார்கள்.
சரி யார் ஜெயிக்கப் போகிறார்கள்: என் பார்வையில்
2016 ஆம் ஆண்டில் ட்ரம்ப் வெற்றி பெற்றதை, இன்றும் அமெரிக்கர்கள் பலர் வாயை பிளந்து பார்த்தபடி தான் இருக்கிறார்கள். விஸ்கான்சியின் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து டெமாக்ரட்டிக்கு ஓட்டு அளித்து வந்தாலும் 2016 அவர்கள் மாற்றி ஓட்டை குத்தினார்கள். அது டிரம்ப் அதிபராக வருவதற்கு பெரும் உதவி செய்தது. இன்றும் அது போல எதுவும் நடக்கலாம்.
இன்றைய நிலைமையில் 6-7 மாநிலங்களில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் அமெரிக்கா அதிபராக முடியும். அவை
- விஸ்கான்சின்
- மிஷிகன்
- நேவாடா
- ஜார்ஜியா
- பென்சில்வேனியா
- நார்த் கேரளினா
- அரிசோனா
இவற்றில் நார்த் கரோலினா என்றுமே ரிப்பப்பிலிக்கன் பக்கம் தான் சென்றுள்ளது. ஆனால் இந்த முறை மாறக்கூடும் என்றும் கணிக்கப் படுகிறது. காரணம் இதே போலத்தான் கலிபோர்னியா மாநிலம் republican பக்கம் 1992 ஆம் ஆண்டு வரை இருந்தது, அதை நீலமாக மாற்றியவர் பில் கிளின்டன். அப்படி ஒரு அதிசயம், கமலா ஹாரிசால் நிகழ்த்த முடியுமா என்பதைப் பொறுத்துப் பார்க்க வேண்டும்.
மீதி மாநிலங்கள் யாருக்கு வேண்டுமானாலும் செல்லாம். யார் இதில் நான்கு மாநிலங்களை கைபற்றுகிறார்களோ அவர்கள் தான் அடுத்த அதிபர்.
என்னைப் பொறுத்த வரை, டிரம்ப் வெற்றி வாகை சூடவே வாய்ப்பு அதிகம் என்று தோன்றுகிறது.
காரனம்?
டிரம்ப்பின் சாதகங்கள்
- மெக்சிக்கோ வழியாக சட்ட விரோதமாக உள்ளே நுழையும் தென் அமெரிக்கா அகதிகள் , அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்று ஸ்டார் ஹோட்டல்களில் தங்க வைக்கும் தேமாக்ரட் மாநிலங்கள். அதனால் காண்டாகி இருக்கும் மாநிலங்கள் மற்றும் கட்சி சார்பு இல்லாதவர்கள்.
- ரஷ்யாவிற்கு எதிரான போரில், கோடி கோடியாக உக்ரைன் நாட்டுக்கு கொடுத்துவிட்டு உள்ளூர் மக்களுக்கு வடிவேலு பாணியில் ஜோப்பை காட்டும் பிடன் அரசாங்கம். உதாரணத்திற்கு நார்த் கரோலினா ஹெலன் புயலால் பாதிக்கப்பட்டு கந்தலாக நிற்க, அந்த மாநிலத்தவர் ஆளுக்கு 700 டாலர் தருகிறோம் என்று சொன்ன கோபம் இங்கே மக்களுக்கு உள்ளது.
- கோவிட் முடிந்ததும் விலைவாசி விண்ணைத் தொட்டது , இன்று வரை அதன் தாக்கம் தொடர்கிறது. பெட்ரோல் விலை ஐந்து டாலர் வரை சென்றது. மக்கள் இதை மறந்த்தாகத் தெரியவில்லை.
- எலான் மாஸ்க் போன்ற பெரும் பணம் படைத்தோர் பக்க பலமாக இருப்பது. எலான் மாஸ்க் பற்றி மேலும் படிக்க
- கருப்பர்களில் ஒரு சாராரும், லத்தீன் அமெரிக்கர்கள் ஒரு சாராரும் , கத்தோலிக்கர்கள் பெரும் படையும், காலேஜ் செல்லாத வெள்ளை அமெரிக்கர்கள் என்று எல்லா பக்கங்களிலும் ஆதரவு அவருக்கு இருக்கிறது.
- இஸ்ரேல் காசா பிரச்சனையில் அமெரிக்கா – பைடன் அரசாங்கம் இஸ்ரேல் பக்கம் நிற்பதால், இஸ்லாமிய வோட்டும் இவருக்கு வர்லாம்
- கமலா ஹாரிஸ் ஒரு பெண், அதிலும் 2020இல் அதிபர் தகுதிச் சுற்றில் ஆரம்பத்திலேயே வெளியெரியவர்.
- டிரம்ப் ஒரு கேப்பிடலிஸ்ட் , pro Business கொள்கைகள் கொண்டவர். இவரால் அமெரிக்கா பல மடங்கு முன்னேறும் என்று நம்பும் மக்கள் மற்றும் முதலாளிகள்
- டிரம்பை கொலை செய்ய நடத்தப்பட்ட தாக்குதல், அவரின் பக்க பலமாக நிற்கும் வான்ஸ், விவேக் ராமசாமி போன்றோர்.
- அவருக்காக நின்று ஓட்டு போடும் முதியவர்கள்!
பாதகங்கள்
- 2020இல் தோற்றத்தை ஏற்காமல் டிரம்ப் மற்றும் அவர் ஆதரவாளர்கள் நிகழ்த்திய வன்முறை.
- அபார்சனுக்கு எதிராக ரிபப்ளிகன் மாநிலங்கள் நடத்தும் போர். – விரிவாக படிக்க- ஆதாம் ஏவாளும், அபார்ஷனும்
- டிரம்ப் ஒரு நிலையற்றவர் , அவரால் அமெரிக்கா தலை குனியும் என்று சத்தியம் அடித்துச் சொல்லும் பலர்.
- துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிக்கும் என்ற பயம் – விரிவாகப் படிக்க →ஹாம் பர்கரும் , ஆயிரம் தோட்டாக்களும்
- கோவிட் சமயத்தில் டிரம்ப் செய்த அழிச்சாட்டியங்கள்
- அவருக்கு எதிராக நிலுவையில் இருக்கும் வழக்குகள்.
- புராஜக்ட் 2025 போன்ற அதி தீவிர வலதசாரி சித்தாந்த பிரகடனங்கள்..
இத்தனை சாதகங்கள் டிரம்ப் பக்கம் இருந்தும் , படித்த அமெரிக்கர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பலமாக இருக்கும் ஜார்ஜியா போன்ற ஸ்விங் ஸ்டேட்ஸ், பெண்களின் ஓட்டு(?) , கடந்த ஆட்சியில் நடந்த எல்லாவற்றையும் பழி சுமக்க இருக்கும் பை டன் தாத்தா என்று எதிர் திசையிலும் காற்று வீசத் தான் செய்கிறது.
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அது சரித்திரம் தான்.
பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.