ஏடா கூடக் கவிதைகள்
ஏடா கூட கவிதைகள்(தேர்தல் சச்ச்ரவுகள் ஓவர்)
ஒரு ரோஜா செடி,
பல ரோஜாக்கள்
ஒரு திரிஷா அம்மா
ஒரே ஒரு திரிஷா
சோ சாட்
நேரம் காலை
7:27 am
—-
————————————
இரு மேகங்கள்
ஏதோ ஓர் ஈர்ப்பில்
நகர்ந்து வந்து
ஒன்றோடு ஒன்று கூடுகின்றன
புன்னகை இல்லை
கை குலுக்கள்கள் இல்லை
டேட்டிங் இல்லை
கல்யாணம் இல்லை
சில நேரங்களில் மட்டும் மழை தந்து பிரிக்கின்றன
இரவு 8மணி
—-
தூரத்தில் ஓர்
கைப்பந்து ஆடும்
பெண்*
அவளின்
அசைவுகளையும்
நகருதலையும்
ஓடி ஆடி
அடித்து ஆடும் தோரானைகளைப்
பார்க்கத் தான்
எத்தனை ஆண்களைத்
தாண்ட வேண்டியாதாக
இருக்கிறது
So sad
நேரம் 7:55pm
——
ஒரு பெண்
அதுவரை அவன்
பார்த்திராத முகம்
அவள் புனன்கை செய்கிறாள்
அதன் மறுதளிப்பில்
கல்யாணமாகாத அவன்
ஒரு வாழ்கையை
வாழ்ந்து முடித்து விடுகிறான்
நேரம்
4:32pm
—
சுற்றி இருக்கும் உற்றார்
தடுத்தாலும்
அவனுக்குத் தெரியும்
அது தாண்டி விடக் கூடிய
கோடு தான்
ஆனால் ஏதோ ஒன்று அவனை தடுக்கிறது
அது, தாண்டினால் திரும்பி வர முடியாத கோடு என்பதாகவும் இருக்கலாம்
—–
இது எழுதியவரின் எண்ணங்களே தவிர
அவருக்கு நடந்தவை அல்ல