சாத்தானின் கால்கள்
உலகத்தின் அனைவரும் அவனுக்குக் கொடுத்தப் பெயர் பைத்தியம்
அவன் நேராக ஈசனிடம் முறையிட்டான்
ஈசன் சிரித்துக்கொண்டே
பைத்தியமாக நீ இருக்கும் வரை தான்,
உன்னை உன் இஷ்டத்திற்கு விட்டு வைப்பார்கள்
உன் மூலம் தெரிந்து விட்டால் அவர்களின் மொத்த பைத்தியக்காரத்தனங்களையும்
உன் மேல் இறக்கி விடுவார்கள்
ஜாக்கிரதை என்றார்
ஆசைக்கும் யதார்ததிற்கும்
இடையில் இருக்கும்
கோட்டினை அழித்திட
வாழ்நாள் முழுதும்
அமிலத்தில் வெந்து உழல்கிறான்
கடைசியில்
யதார்த்தம் உணர்ந்து
மூப்படைந்து ஆசைகளுடன்
மண்ணில் புதைகிறான்
முதலில் மருத்துவர்கள் கைவிரித்தனர்
அடுத்து செவிலியர்கள் கைவிட்டனர்
பின்னர் மருந்துகளும் கைவிட்டன
கடைசியாக கடவுளிடம் மன்றாடிப் பார்த்தார்கள்
அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்
உங்களை முதலில்
கைவிட்டதே நான் தான் தெரியுமா