arasiyalbjp

செல்லாக்காசா ஆர்டிகிள் 356?

https://timesofindia.indiatimes.com/humour/cartoons/line-of-no-control/article-356/cartoonshow/50748122.cms

இன்று மெட்ராஸ் பேப்பரில் வந்திருக்கும் ஒரு கட்டுரை முக்கியமானது. https://www.madraspaper.com/nam-kural-seven/ (சந்தா கட்டி படிக்கவும்) #madraspaper

ஒரு மாநிலத்தில் , ஜனநாயக ரீதியில் ஆட்சி அமைத்த ஒரு அரசை கலைக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது, அதற்கான சட்டம் எப்படிப் பட்டது என்பதை தெளிவாகச் சொல்கிறது. அதே நேரம், தமிழகத்துக்கே உரித்தான பாஜக எதிர்ப்பு என்கிற மன நிலையில் மட்டுமே இது எழுதப்பட்டதாக எனக்கு பட்டது. காரணம், திமுககாரர்கள் என்னவோ ரட்சிக்க வந்த தேவர்களைப் போலவும், பாஜக மட்டுமே பாசிசத்தின் அடையாளமாகவும் அந்தக் கட்டுரை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

முத்தாய்ப்பாய் – ” ஆனால் திமுக காரர்கள் அப்படிப் பேசமாட்டார்கள்” என்று நற்சான்றிதழ் வேறு. கீழ் வரும் செய்தி பொய்யா?”இந்தியாவில் இருந்து தென் மாநிலங்கள் பிரிந்து செல்ல விரும்பினால் அதற்கு ஆதரவு அளிப்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்” – https://zeenews.india.com/…/will-support-it-if-southern…

இதற்கும் மதச் சார்பின்மைக்கும் சம்பந்தம் இல்லை, ஆனால் இப்படி ஒன்று நிகழ்ந்தால் 356 செல்லாது என்று சொல்கிறதா இந்த கட்டுரை?

மேலும் அதில் எடுத்துக்காட்டாய் காட்டப்பட்டிருந்த எஸ் ஆர் பொம்மை அரசாங்கத்தை கலைத்தது காங்கிரஸ். திமுக அரசாங்கத்தை கலைத்ததும் காங்கிரஸ் தான் என்பதை சுட்டிக்காட்டாமலேயே கட்டுரை முடிகிறது. அன்றைய காங்கிரஸ் கட்சிக்கும், இன்றிய பாஜக விற்கும் இருக்கும் ஒரே வித்யாசம், மத அரசியல்.

ஒரு நடுநிலைப் பத்திரிகை எல்லா கட்சிகளையும் ஒரே தராசில் வைத்து அளக்க வேண்டாமா?

பி.கு.

எனக்கு பாஜக மேல் பாசமெல்லாம் இல்லை, திமுக மேல் காண்டு அவ்வளவுதான்.

இதை வைத்தே இந்த போஸ்டின் நடு நிலைத்தன்மையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

Hi, I’m tamilvalai

Leave a Reply