தமிழ்

வள்ளுவர் கறுப்பா சேப்பா

கறுப்பு வள்ளுவர் படம் ஒன்று வலைதளங்களில் பரபரப்பை கிளப்பி வருகிறது  . ஆறு மாதத்திற்கு முன் தான் காவி பெயிண்ட் கொடுத்திருந்தார்கள், இப்போது கறுப்பு .

எனக்கென்னவோ வள்ளுவர் கறுப்பு தான் என்றே தோன்றுகிறது . என்ன தான் இன்றைய மயிலாப்பூரில் பிறந்ததாக நம்ம பட்டாலும் , அவர் கறுப்பாக இருந்ததற்கு வாய்ப்புகள் அதிகம் . காரணம் ஆதி தமிழன் கறுப்பு. 

உடனே திராவிடால் அனைவரும் , திருவள்ளுவர் எங்க ஆள் என்று மார் தட்ட வேண்டாம். அன்றே வள்ளுவன் முதல் குறளில், ஆதி பகவன் என்று அவர்களை செருப்பால் அடித்து விட்டார் . அதே நேரம் அன்றே எங்கள் “பகவானை” பற்றி பேசியிருக்கிறார் பார்த்தாயா என்று சங்கிகள் இந்த பக்கம் வரவே வேண்டாம் . அவர்களுக்கும் பல செருப்படிகளை பல குரல்களின் மூலம் அன்றே தந்துவிட்டார் அய்யன்.

அய்யன் என்றதும் அய்யர் என்று பொருள் கொள்ள வேண்டாம் .கருப்பு என்பதனாலும் இன்ன சாதி என்று பொருள் கொள்ள வேண்டாம் . பாரதியை பார்ப்பனராக பார்க்கும் சமுதாயத்தில் வாழ்கிறோம் நாம். 

ஆனாலும் சிக்ஸ் பேக் எல்லாம் ஓவர். உலகப் பொதுமறை எழுதியவர் உலகின் பெரும்பாலான ஆண்களின் கவசங்களில் ஒன்றான தொப்பை தரித்தபடி அல்லவா இருந்திருக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பலரை இங்கு தமிழர் இல்லை என்று சொல்லும் இந்த நேரத்தில், ஆதி தமிழன் அய்யனை விட்டுவைப்போமே? 

Hi, I’m tamilvalai

Leave a Reply