நிழல்
நிழல் நீர்த்துப்போன மனிதன் நிழலைக் காணாது கவலையுற்றான் உன் பாவங்களைக் களைந்து விட்டேன் போ என்றான் சித்தார்த்தன் நக்கிப் பிழைத்தே வாழ்ந்தவனுக்கும் நஞ்சுள்ளம் கொண்டவனுக்கெல்லாம் நிழல் தெரிகிறதே என்றான் மனிதன் காற்றுக்கும் நீருக்கும் நிலவுக்கும் இரவுக்கும் மனதிற்கும் கனவுக்கும் உறவுக்கும் நிழலில்லை , இனி உனக்கும்தான் என்றான் சித்தார்த்தன் மனிதன் மறைந்தான் , நிழலற்ற கவலையுடன். Views: 196
தொட்டால் தான் என்ன
ஆகப் பெரியவராம் அவரைத் தொடவே கூடாதாம் தொட்டால் தீட்டாம் நான் நட்ட நெல் தீட்டில்லை சுட்ட செங்கல் தீட்டில்லை வளர்த்த வாழை தீட்டில்லை ஆனால் நான் மட்டும்...

அழு
பிறப்பிலும் அழு இறப்பிலும் அழு இடரிலும் அழு பேருவகையிலும் அழு காதலிலும் அழு மோதலிலும் அழு பிரிவிலும் அழு மறுகூட்டலிலும் அழு காசில்லையேல் அழு ஒரு தோஸ்தில்லையேல் அழு துனையில்லையேல் அழு அவள் சூலில்லையெல் அழு நுந்தைக்கும் அழு யாய்க்கும் அழு அசலுக்கும் அழு நிழலுக்கும் அழு கருனையிலும் அழு வறுமையிலும் அழு சான்றோருக்கும் அழு ஈன்ரோருக்கும் அழு ...