ஏடா கூடக் கவிதைகள்
ஏடா கூட கவிதைகள்(தேர்தல் சச்ச்ரவுகள் ஓவர்) ஒரு ரோஜா செடி, பல ரோஜாக்கள் ஒரு திரிஷா அம்மா ஒரே ஒரு திரிஷா சோ சாட் நேரம் காலை...
சில்லுகள்
உடைந்த கண்ணாடித் துண்டுகளை ஒட்டி வைக்கத்தான் இங்கே எவ்வளவு முயற்சிகள். அவை கிழித்துப் பழகியவை இரத்தம் பார்க்கத் துடிப்பவை சேரவே வேண்டாம் என்று முடிவெடுத்தவை. இருந்தும் மனித...
இருகப்பற்று
ஜனவரி மாத ரயில் பயணம் சில்லென்ற காற்று கையில் தேநீர் கோப்பை எதிரில் எங்கோ பார்த்த முகம் புன்னகைகள் பரிமாறின ஊதா அவனின் ஆத்ம நிறமானது ஒரு...
கணக்கு -2
ரயில் ஜன்னலின் இரும்புக் கம்பிகளின் வழியே , கடந்த காலம் மின்மினிப் பூச்சிகளாக மின்னி மறைய, தவறுகள் மட்டும் மறையா தழும்புகளாய் நினைவில் நிற்க நொண்டி ஒருவனுக்கு...
கணக்கு
ஆயிரமாயிரம் அடிகள் நீந்தி யமுனையின் அடியில் அந்தக் கதவை கண்டான் தட்டிப் பார்த்தான் உதைதுப் பார்த்தான் கெஞ்சிப் பார்த்தான் கதவு திறக்கவில்லை ஏதோ குரல் கேட்க ஒட்டுக்...
சொர்கம்
சாவித் துவாரத்தில் கண் வைத்துப் பார்த்தேன் ஒய்யாரப் பூனைகளும் கம்பீர நாய்களும் வனப்பு மிக்க மயில்களும் ஆடித் திரிந்தன கதவை தட்டிப் பார்த்தேன் மனிதர்களுக்கு அனுமதி இல்லை என்று பதில் வந்தது சொத்து சுகம் அனைத்தையும் எடுத்துக்கொள் ஒரு ஓர இடமாவது கொடு என்றேன் உயிரைத் தருவாயா என்றார்கள் ஒரு நொடி யோசித்தேன் துவாரம் மூடப்பட்டது
ஆழம்
எவ்வளவு நிரப்பினாலும் ததும்பாமல் விளிம்பில் நின்றபடி தரை தட்டா ஆழத்தை எட்டிபார்ற்கிறது மனது
சேயோன்
குருதியில் நனைந்த அரிவாளின் கூர் முனைகள் அதையேந்தித் திரியும் முறுக்கு மீசை அரக்கர்கள் பற்றியெரியும் குடிசைகள் ஓலமிட்டபடி வெளிவரும் தீப்பிடித்த மனிதர்கள் பொசுங்கி நாற்றமெடுத்த மயிர்ச் செண்டுகள் ...
கடவுளின் கூடாரம் காலி
மார்கழிக் குளிரிலும் ஐப்பசி மழையிலும் கால் கடுக்க கோவில்களில் நின்றேன் பாசுரம் பாடி பாலாபிஷேகம் செய்து புனுகு சாத்தி அது ஒன்றை மட்டும் கொடுத்துவிடு என்றேன் ...