misc

சீனக் கலகம் நன்மையில் முடியும் 

சீனக் கலகம் நன்மையில் முடியும் 

அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள  கம்பெனிகள் தான் இதுவரை,  ai தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பதாக பறைசாற்றிக் கொண்டிருந்தன(யாரு சொன்னா , அவங்களே சொன்னாங்க  மொமென்ட் )  . இந்தக் கம்பெனிகள் ChatGPT போன்ற செயலிகளை மக்களுக்கு பகிர , அவை வைரல் ஆகின. fortune 2000 கம்பெனிகள் அனைத்தும் நீ நான் என்று அவர்கள் கம்பெனிகளில் ai தொழில்நுட்பத்தை எப்படி உள்ளிறக்கலாம் என்று கணக்கு போட்டன. 

open ai போன்ற கம்பெனிகள் , இதை வைத்து கோடிகளைக் கொட்டி அடுத்த கட்டத்திற்கு ai தொழில்நுட்பத்தை நகர்த்த முயன்றன . இதில் முதலீடாக பல கோடிகள் கொட்டவும் செய்தன . 

இதற்கெல்லாம் பெரிய உதவியாக இருந்தது nvidia கம்பெனியின் சிப்புகள். அதனால் அதன் பங்கின் விலையும் பல மடங்கு ஏறியது . 

இனி இந்த ai தொழில்நுட்பம் மட்டும் இருந்தால் போதும் வேலைக்கு ஆள் கூடத் தேவையில்லை என்று பல கம்பெனிகள் ai கம்பெனிகளிடம் டீல் போட்டன . உதாரணம் , மைக்ரோசாப்ட் + ஓபன் ai,  அமேசான் + அந்தோரோபிக் . எதிர்காலத்தில் லாபம் வரும் என்று கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்தன . ஓபன்ai இன் செயலி ஒரு கோடி வார்த்தைகள் உருவாக்க $90000 தேவை , அதிலும் செயலியை உபயோகப்படுத்தும் முக்கால் வாசி பேர் இலவசமாகவே உபயோகப்படுத்தினர். லாபமே இல்லாவிட்டாலும் , வேகமே வெங்கடாசலம் என்று புயல் வேகத்தில் நகர்ந்தன இந்தக் கம்பெனிகள். 

இந்தக் கம்பெனிகள் பில்லியன்களில் செய்ததை, சில கோடிகளில் செய்ததாக சைனாவின் deepseek கம்பெனி குண்டைப் போட்டது . ஒரு கோடி டோக்கன்களை உருவாக்க சில டாலர்கள் போதும் என்றது . ஆனால் அவர்கள் r&d போன்ற பிற செலவுகளையும் , எத்தனை nvidia சிப்ஸ் உபயோகிக்கிறார்கள் என்ற தகவல்களையும் சொல்லவே இல்லை . 

இங்கே அமெரிக்காவில் பற்றிக் கொண்டு எரிந்தது . அவர்கள் இவ்வளவு சீப்பாக செய்கிறார்கள் என்றால் , இந்த அமெரிக்க  கம்பெனிகள் இதற்கு மேல் வளர வாய்ப்பு இல்லை என்று கருதி panic selling பட்டனை அழுத்தினார்கள் investors. 

இதில் முக்கியமான விஷயம் , deepseek ai ஒரு சைனா கம்பெனி. அது தன் மாடலை ஓபன் சோர்சாக இலவசமாக கொடுத்தாலும், அதன் செயலி (app) என்ன செய்கிறது என்று நம்மால் பார்க்க முடியாது . deepseek சொல்லும் அத்தனையும் உண்மையாக இருக்க வாய்ப்புகள் குறைவு ! இவ்வளவு சீப்பாக செய்யக் கூடிய திறன் பெற்றவர்கள் தான் சீனாக்காரர்கள் என்றாலும் , அவர்கள் என்றுமே 100% உண்மையை வெளியே சொன்னது  இல்லை . 

இதில் நகை முரண் என்னவென்றால் deepseek கம்பெனி கூட nvidia கம்பெனியின் சிப்புகளைத் தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறது . இருந்தும் அதன் ஸ்டாக் விலை 20% கீழே சென்றது . இது ஒரு பேரலையாக உருவெடுத்து , எந்தக் கம்பெனி எல்லாம் ai சம்பத்தப் பட்ட வேலைகளை அதிகம் செய்கிறதோ அவையெல்லாம் நேற்று விற்றுத் தீர்ந்தன . 

இன்று , அதே nvdia 5%அப் , ஷர்ட் கவர் செய்து லாபத்தை யாரோ பார்த்திருப்பார்கள். 

ai எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது, அதன் அடித்தளமான சிப் கம்பெனிகளும் , தொழில் நுட்பம் தரும் open ai, மைக்ரோசாப்ட் , அமேசான் போன்ற கம்பெனிகளும் நன்றாக தொழில் செய்கின்றன . 

கடைசியாக, அப்படியே அந்த சீனா கம்பெனி சொல்வது உண்மையாக இருந்தால் , இங்கே இருக்கும் கம்பெனிகள் அப்படியே காப்பி பேஸ்ட் செய்யப் போகின்றன . நமக்கு இன்னும் மலிவு விலையில் ai தொழில்நுட்பம் கிடைக்கும் . பதற வேண்டாம் .. 

it may not be worth the hype , but it’s not going anywhere . 

Hi, I’m tamilvalai

Leave a Reply