Storytamil

கஞ்சன்

பேருந்து நிலையத்தில் உள்நுழைந்த அந்த பேருந்து தனக்கானது  என்று நினைத்த  செல்வமணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது . 

இதோ வந்துவிடும் , அதோ வந்துவிடும் என்று மூன்று  மணி நேரமாக ஒரு டீ காபி கூட குடிக்காமல் நின்றிருந்தான் செல்வமணி . மற்றும் ஒரு முறை அருகில் இருந்த டீ கடையின்அருகே சென்று டீகாபியின் விலையை பார்த்தான் . ஒரு காபிக்கு இவ்வளவு விலையா என்று மனதில் நொந்து கொண்டான் . டீ கடைக்காரர் இவன் அடிக்கடி வருவதும் போவதுமாய் இருந்ததை பார்த்து , முறைக்க ஆரம்பித்தார் . 



அப்படியே பார்வையை சுழற்றிய செல்வமணி அங்கு இருந்த  வாலிபர்களை பார்த்தான் , மிக சந்தோஷமாக புகைத்துக் கொண்டிருக்கும் அவர்களை பார்த்து எரிச்சல் வந்தது இன்றைய தேதியில் ஒரு சிகரெட் அடிக்க முடிகிறதா  

ஒரு சிகரெட்டை தனியாக வாங்க முடியாதாம் , முழு டப்பாவும் வாங்க வேண்டுமாம்! , எங்கே போய் கொள்ளை அடிப்பது  

முன்னொரு காலத்தில் ஒரு சிகரெட் ஒரு ரூபாய் இருந்த பொழுதே , ஒரு நாளைக்கு ஒன்று தான் அடிப்பான் . பின்னர் ஒவ்வொரு வருடத்திற்கும் இவர்கள் விலை ஏற்றி , கடைசியில் வாரத்திற்கு  ஒரு சிகரெட் குடித்து வந்த செல்வமணி அந்த பழக்கத்தை அடியோடு கைவிட்டான்பாக்கெட் நூற்றி இருபது ருபயாம் , எவன் அடிப்பான்  இந்த சிகிரெட்டை சரி பீடி இழுக்கலாம் என்றால் வாயெல்லாம் ஒரே நாற்றம் . சுருட்டு கேட்கவேவேண்டாம்.

இந்த சிகரெட் சிந்தனைகள் மெல்ல மறைய , மதிய பசி எட்டி பார்த்தது . ஒருவழியாக முடிவெடுத்து அந்த கடைக்காரனின் மிக அருகில் சென்று மெதுவாக “அண்ணா அரைகிளாஸ் டீ கிடைக்குமா” என்றான்ஏற இறங்க பார்த்த அந்த டீக்கடைக்காரர் கோப்பையை எடுத்து அதை முழுதும் கழுவாமல் ஏனோதானோவென்று ஊற்றித் தந்தான்மாட்டு மூத்திரம் கூட இன்னும் நன்றாக இருந்திருக்கும் போலஅதை விட கேவலமாக இருந்தது இந்த டீ. டீ தூள் போட சொன்னால் ஆட்டு புழுக்கையை போட்டு வைத்திருப்பான் போல.  கொடுக்கும் ஐந்து ரூபாய்க்கு எவ்வளவு மட்டமான பொருளைதருகிறார்கள்  என்று  அந்த  டீ கடைகாரனை மனதார திட்டிக்கொண்டு  அதை மெல்ல மெல்ல குடித்தான் செல்வமணி

 இந்நேரம் செல்வமணி எவ்வளவு கஞ்சன் என்று புரிந்து இருக்கும்பெயரில் மட்டும் தான் செல்வமணியே தவிர கையில் என்றுமே செல்வமோ , மணியோ இருந்ததில்லைஎல்லாம் குடும்ப விதிஅவனது தந்தையும் அவனை போலவே அஞ்சு பத்து பார்த்து செலவு செய்தாலும்ஒரு சொந்த வீடு கூட வாங்காமலேயே மண்டையை போட்டார்கடைசி வரை வாடகை வீடு தான் . 

அந்த வாடகை வீடு இருக்கும் நாகைநல்லூர் என்ற ஊருக்கு தான்   இவன் செல்வதாக இருந்தான் . அதற்கு நேரடியாக பேருந்து இருந்தாலும் , அதில் விலை சற்று அதிகம் , உள்ளூர் பேருந்தில் சென்றால் காசு மிச்சம் . காசை சேமிக்க , சில மணி நேரங்களை இழக்க முடிவு செய்தான்வறுமையில் இருப்பவர்களுக்கு நேரம் மட்டும் தான் காசில்லாமல் கிடைக்கும் , பணம் மட்டும் கிடைக்கவே கிடைக்காதுகிடைத்தாலும் ஒட்டாது ! 

இவ்வளவு ஏன்இவன் வேலை பார்க்கும் ஹோட்டல் ஒரு மூன்றாம்  தர ஹோட்டல் தான்இருந்தாலும் இவன் தனது சர்வர் வேலையை சரி வர செய்து கிடைக்கும் டிப்ஸ் பணத்தை சேமித்து வைத்து வந்தான் . அதற்கும் வைத்தார்கள் வேட்டு . போன மாதம் முதல் , வந்த டிப்ஸை மொத்தமாக ஒரு ஜாடியில் போட்டு அனைவருக்கும் பங்கு போட்டு கொடுத்தார்கள்என்ன அநியாயம் பார்த்தீர்களா ! இவன் ஓடி உழைத்து , ஒருவருக்கு வேண்டிய அனைத்து உணவுகளையும் சிந்தாமல் ,சிதறாமல் முகம் சுளிக்காமல் , சிரித்த முகத்துடன் அவர்கள் உணர்வறிந்து சப்ளை செய்து அனுப்பினால் பத்து ரூபாய் கிடைக்கும் , இனி இது பொது சொத்தாம்

சரி அப்படி சம்பாதித்த பணத்தில் என்ன செய்தான்?பாதியை , மாத சீட்டில் போட்டு வைத்திருந்தான் . சீட்டு நடத்திய  அந்த அயோக்கிய பயல் , மோடி ஐநூறு ரூபாய் செல்லாது என்று அறிவித்த மறுநாளே மஞ்சள் நோட்டீஸ் ஒட்டி விட்டு ஓடி விட்டான் ! யாரை குற்றம் சொல்வதுஇது தன் விதியே என்று நம்பினான் , அன்றிலிருந்து விட்ட காசை பிடிக்க  ஆகப்பெரிய கஞ்சனாக உருவெடுத்தான்.

ஒருவழியாக அங்கே நின்று கொண்டிருந்த ஒரு பேருந்து கண்டக்டரிடம் சென்றான் . தனது ஊருக்கு அடுத்த உள்ளூர் பேருந்து எப்பொழுது என்ற கேட்டதும்  அவர் “இன்று முதல் பேருந்து முன்னரே கிளம்பி விட்டது தம்பி , அடுத்த பேருந்து எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாது  ” என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்

குடித்த டீ , வயிற்று அமிலத்தில் கரைந்து மறுபடியும்  பசி வர  ஆரம்பித்திருந்தது . சாப்பிட எப்படியும் ஐம்பது  ரூவா ஆகும் , வீட்டிற்கு போய்விட்டால் காசில்லாமல் சாப்பிட்டு விடலாம் என்று மணக்கண்கில் அரை மணி நேரம் தொலைதான் . பசி வயிற்றை நோண்ட   , போய்தொலைக்கிறது என்று அங்கே நின்றிருந்த நேரடி பேருந்தில் ஏறினான் .ஒரு வழியாக அந்த பேருந்து கிளம்பி அரை கிலோமீட்டர் சென்றிருக்கும் , அப்பொழுதான் எதிர் வரும் பேருந்தை பார்த்தான் , அதிர்ந்தான்! 

நாகை நல்லூர் உள்ளூர் பேருந்து அவனை மதிக்காமல் , இவன் இவ்வளவு நேரம் காத்திருந்த பேருந்து நிலையம் நோக்கி  சென்றது


அதை பிடிக்க , படாரென எழுந்து , ஓடும் பேருந்தில் இருந்து குதித்தான் . அதன் பின் சக்கரத்தில் தலையை கொடுத்தான் .


கையில் இருந்த 50 ரூபாய் நோட்டை இறுக்கி பிடித்தபடியே இறந்தான் . 

Hi, I’m valaithinni

Leave a Reply