Uncategorized

நரகம் – மறுபக்கம்

 பதறியபடியே படுக்கையில் இருந்து எழுந்தான்  முகுந்த். என்ன ஒரு கோரமான கனவு ! படபடக்கும் நெஞ்சினை ஆசுவாச படுத்த தண்ணீர் பாட்டிலை தேடி எடுத்தால்அதில் ண்ணீருக்கு பதில்  ரத்தம் ! 

விடுக்கென படுக்கையில் இருந்து எழுந்து முகத்தை துடைக்க கையை தூக்கினால் , கை இல்லை. அதற்கு பதில்  பாம்புகள் நெளிந்தன ! விரல்களுக்கு பதில் புழுக்கள் ! தொண்டை வறண்டது .தண்ணீர் குடிக்க பிரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம் , அழுகியநிலையில் சடலங்கள் , அதில்  ஒரு பாட்டியின் சடலம் வாயை பிளந்தபடி முறைத்தது . 

முகுந்திற்கு இதயத்துடிப்பு அதிகரித்து வாந்தி வருவது போல ருந்தது . உடனடியாக பாத்ரூம் சென்று வாந்தி எடுத்தால் , வாயிலிருந்து  பூச்சிகளாக கொட்டின ! பின்னங்கால் பிடறியில் அடிக்க வெளியில் வந்து போனை எடுத்து  யாரையோ அழைக்க முயல , எதிர் தரப்பில் யாரும் வராமல்  அழுகை குரல்கள் மட்டுமே கேட்டன ! 


வீடியோ கால் செய்தால் , இவன் கண்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் ஓட்டைகள் ! . சடாரென போனை விட்டெரிந்து சாமி அறை பக்கம்  ஓட , சாமி இருந்த அறை பூமியில் திடீரென புதைந்தது , ஒரு முடிவில்லா  பள்ளமே இவனை வரவேற்றது . 

வீட்டை விட்டு ஓட  கதவை திறந்தால் , இவனது காலில் எரிமலையின் குழம்பு பட்டது. நிமிர்ந்து பார்த்தால் வீடே குழம்பில் தான் மிதந்து கொண்டு இருக்கிறது , நிமிர்ந்து மேலே பார்த்தான். இவன் வேண்டுமென்றே காரை ஏற்றி கொன்ற அந்த தெரு நாய் சிரித்துகொண்டு இருந்தது … 


பதறியபடியே படுக்கையில் இருந்து எழுந்தான் முகுந்த்.

Hi, I’m valaithinni

Leave a Reply