போன வாரம் படையப்பா படம் போட்டிருந்தார்கள் , என்ன ஒரு படம் . இப்பொழுது தொலைக்காட்சியில் போட்டாலும் டி ஆர் பி யை அள்ளி தரும் அமுத சுரபியாக இருக்கிறது .முத்து / பாட்ஷா எல்லாம் இதே கேட்டகரி படங்கள் தான் . 

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.  

அதே நேரத்தில் தான் அண்ணாதே படமும் ரிலீஸ் ஆகி நன்றாக ஓடியதாகவும், இல்லை சுமார் தான் என்று இரண்டு விதங்களாகவும் சொல்லபடுகிறது.  ஆனால் சில விமர்சகர்கள் கழுவி ஊத்துகிறேன் பேர்வழி என்று வன்மத்தை கக்கியும் வருகின்றனர் . இதையெல்லாம் ஒதுக்கி வைத்து ரஜினி எனும் நடிகனின், ஒரு மாபெரும் மனிதனின்  கடைசி கட்ட திரை வரலாற்றை உற்று நோக்கினால் ஒரு உண்மை புலப்படும் . 

அது ஒரு சோக கதையின் தொடக்கமாகவும் அமையும் .

 

 

 

சரி கதையை ஆரம்பிப்போமாபாட்ஷா படத்தில் ஒரு பாட்டு வரும்எட்டு எட்டா மனுஷ வாழ்க்கை பிரிச்சுக்கோ என்ற பாடல் தான் அது . அதில்  கடைசி எட்டிற்கு அடுத்து  retirement சொல்லி இருப்பார்கள்அது இல்லையேல் நிம்மதி இல்லை என முடியும்   . ஆனால் அப்படி ஒன்றும் இல்லாத மனிதராக ரஜினி அவர்கள் மாறி விட்டாரோ என்றே தோன்றுகிறது

படையப்பா என்னும் மாபெரும் வெற்றி படம் தான் அவரது திரை துறை கடைசி அத்தியாயத்தின் தொடக்கமாக இருக்கிறதுஅதற்கு சில வருடங்களுக்கு முன்பு தான் அவர் ஜெயலலிதா அம்மையாருக்கு எதிராக ஒரு கருத்தை சொல்லி , ஆட்சி கட்டிலில் இருந்து இறக்கி வைத்தார்அதே டெம்ப்ளேட் இந்த படத்திலும் வரும் . பொன்னியின் செல்வனில் இருந்தே மூல கதை எடுக்க பட்டதாக சொன்னாலும் , நீலாம்பரி யாரை நியாபக படுத்துகிறார் என்று யோசித்தால் விஷயம் பிடிபடும் . 

 

ஏன் படையப்பாவில் இருந்து இந்த கட்டுரையை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்கான பதில் இது தான் . இந்த படம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது .  இந்த படத்தில் இருந்து தான் விக் அணிய ஆரம்பித்தார் ரஜினிகாந்த்அதே போல எண்பதுகளில் அவருக்கு ஜோடியாக நடித்த லட்சுமி இந்த படத்தில் அவரின் அம்மாவாக புரொமோஷன் வாங்கி இருந்தார்இது ஒரு மிக முக்கியமான பாய்ண்ட்

 

எண்பத்தி ஆறு தியேட்டர்களில் நூறு நாட்கள் தாண்டி இந்த படம் ஓடியதாக விக்கிபீடியா சொல்கிறது . வசூல்  44 கோடிரஜினி என்றும் தான் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று நிரூபித்த படம்இது அவரின் சொந்த தயாரிப்பில் வெளியான படம்அது அள்ளிதந்த லாபத்தில் அடுத்த படமும் சொந்த படம் என்று முடிவெடுக்கப்பட்டது

 

இந்த படம் முழுக்கவே  லதா ரஜினி அவர்களின் கட்டுப்பாட்டில் தயாரானதுரஜினி அவரது குருநாதர் பாபாஜியை சந்தித்து வந்து , அதை  வைத்து ஒரு கதை எழுதி இருந்தார் .  ரஜினிக்கு ஆகப்பெரிய ஹிட்டானபாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவை இயக்குனராக ஒப்பந்தம் செய்கிறார்கள்மற்றொரு ஆஸ்தான இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அந்த கதையை கேட்டு எஸ்கேப் ஆனரா என்று தெரியவில்லைஆக மொத்தம் “பாபா” படம் தொடங்கியது

 

அந்த படம் ரஜினி திரை வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு படம்லதா ரஜினியின் பிசினஸ் வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை படம்டீ தூளில் ஆரம்பித்துபிஸ்கட் அது இது என்று , பாபா படத்தை வைத்து லதா ரஜினி அவர்கள்  நடத்திய பிசினஸ் பற்றி ஒரு குறு நாவலே எழுதலாம்படையப்பா என்னும் சூப்பர் டூப்பர் படத்தை அடுத்து வருவதினால் விண்ணை முட்டும்  எதிர்பார்ப்பு . அதை நன்றாக உணர்ந்த லதா அவர்கள் வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் (ரஜினி சம்பளம் தவிர்த்துஉருவான இந்த படத்தை 50-80 கோடி வரை பிசினஸ் செய்து விட்டார்இவ்வளவு விலையா என்ற முணுமுணுப்புகள் காதில் படும் படி கேட்டது

 

படம் ரிலீஸ் ஆனதுஎப்படி ஒரு நாத்திகன் , ஆத்திகன் ஆகிறான் என்பது தான் ஒன் லைன் . முதல் நாள் ஏக கூட்டம்ஆங்காங்கே கலகக்குரல்களும் எழ ஆரம்பித்திருந்தனநீளம் அதிகம்சுமாரான கதைதேவை இல்லாத விஷயங்கள் பல இந்த படத்தில் இருந்ததுமுக்கியமாக  படத்தில் ரஜினி வழக்கமான மேக்கப் இல்லாமல் சற்றே சோர்வடைந்த கெட்டப்பில் வளம் வருவார்அதை மறைக்க நொடிக்கு நொடி ஒரு பன்ச் வசனமோபில்ட் அப்போ இருக்கும்இந்த காரணங்களினால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. படம் பிளாப் என்று ரஜினியின் காத்து படவே சொல்ல ஆரம்பித்தனர் 

 

 

படம் சுமாரான வசூலை பெற்றதாகவே இன்று வரை நம்பப்படுகிறதுஆனாலும் அன்றைய தேதியில் படத்தை ஒரு டிசாஸ்டராகவே மதிப்பிடட்டார்கள்.  படம், 35 கோடி வசூல் செய்ததுமினிமம் கியாரண்டி என்ற முறையில் விற்றதினாலும்தனது குருவை பற்றிய கதை என்பதினாலும் ரஜினிபணத்தை திருப்பி கொடுத்தார்அவரின் சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தில் விழுந்த முதல் விரிசல் அதுசுரேஷ் கிருஷ்ணாவை பாதாளத்தில் விழ வைத்த படம் அது

 

பாமாக வேறு ரஜினி சிகரெட் பிடிக்கிறார் என்று வட தமிழகத்தில்  பெட்டியை  தூக்கி சூறையாடினார்கள்இது தான் கடைசி படம் என்று நினைத்த ரஜினிக்கு திரும்பும் பக்கம் எல்லாம் அடிவயதான சிங்கத்தின் உறுமல் சற்றே அதிமாக இருக்கும்அது போலவிண்ணை தொட்ட ரஜினிக்கே தன்னை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை .. நிம்மதியாக திரை பயணத்தை முடிக்கலாம் என்றிருந்த ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலியை பதம் பார்த்தது பாபா படம்அவரது வாழ்வின் முக்கியமான ஒரு முடிவை எடுத்தார் ரஜினி …

 

தொடரும் …….

 

Hi, I’m valaithinni