தமிழ்

ஜந்து – காக்டெய்ல்

.

தினமும் ஒரு அத்தியாயம். அதுவும் வாட்சப் சேனலில் மட்டும். அதிலும் ஒரே ஒரு நாள் மட்டும் அங்கிருக்கும்.ஒரு நாள் படிக்கத் தவிறினாலும், அடுத்த நாளே டெலீட் என்று ஒரு சர்வாதிகாரியின் மிரட்டல் தொனி வேறு.

இவற்றையெல்லாம் பார்க்கும்போதே, இதை படிக்கத்தான் வேண்டுமா , ஆசான் கொஞ்சம் ஓவராகத்தான் போகிறாரோ, என்று யோசிக்கத் தோன்றியது.

இருந்தும் ஆரம்பித்தேன்.

முதல் அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்த அந்தத் தருணத்திலிருந்து , இதோ இன்று முற்றும் என்று முடிந்த தருணம் வரை , காலைக் கடன்களில் ஒன்றாகிப் போனது இந்த ஜந்து ( நான் இருப்பது usa வில், அதனால் காலைக் கடன், உங்களுக்கு மதியக்கடனாகவோ, மிட் நைட் கடனாகவோ இருக்கலாம்).

தினமும் எழுந்ததும் காபி பிளஸ் ஜந்து என்றே ஓடிக் கொண்டிருந்தது. அதற்கு இன்று ஒரு முற்றுப் புள்ளி வைத்து விட்டார் கொடுங்கோலன்(ர்) பாரா.

காலையில் இனி, இது வராது என்ற ஒரு சோகமும் சிறிதாக அப்பிகிக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் – அடுத்த நாள் ஆபீஸ் போக வேண்டுமே என்று வயிற்றில் ஒரு மாற்றம் நிகழுமே, அதே போன்ற ஒரு உணர்வு இப்போது மிஞ்சுகிறது.

ஜந்து – ஒரு ஆபீஸ், நான்கு மாடிகள்,ஏகப்பட்ட ஜந்துக்கள், அவர்கள் வாழ்வின் சோகங்கள், சின்னச் சின்ன சந்தோஷங்கள், பொறாமைகள், ஆற்றாமைகள் என்று ஒரு காக்டெய்ல் ஆக இந்தத் தொடர் இருக்கிறது. இது நாவலா, தொடர்கதையா, இல்லை Jeffrey Archer இன் “ prison diary “ போன்ற ஒரு புத்தகமாக என்று வகை படுத்திப் பார்க்க முடியாத ஒரு கலவை. எதுவாக இருந்தால் என்ன , படிக்கப் படிக்க, அதில் வரும் ஜந்துக்கள் நம்முடன் ஒன்றாகி விடுகிறார்கள். அவர்களை நாமும் அரவணைத்துக் கொள்கிறோம்.

முதல் சில அத்தியாயங்களில் ஏகப்பட்ட கேரக்டர்களை உள்ளே தள்ளி விட்டு, வேடிக்கை பார்க்கிறார் பாரா. இவர், இவரா அவரா என்று யூகிக்கவே இன்னொரு முறை படிக்க வைத்து விடுகிறார் . பின்னர் அவர்கள் நம்மோடு ஒட்டிக் கொள்கிரார்கள் , அவர்களுடன் சேர்ந்து நாமும் பயணிக்கிறோம். அவர்களுடன் சிரிக்கிரோம், கோபம் கொள்கிறோம் , பரிதாபப் படுகிறோம். ஏதோ ஒரு வகையில் இவர்களில் ஒருவர் சந்திக்கும் உணர்ச்சிகளை ஆபீசில் நாமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதில் தான் இதன் வெற்றியை அங்காங்கே தூவி, நம் கைபிடித்து அழைத்துச் செல்கிறார் பாரா. (இதே போன்று , பட்டையைக் கிளப்பும், மற்றொரு ஆபீஸ் சமாச்சாரம் மெட்ராஸ் பேப்பரில் உள்ளது, அது புத்தகமாக வருவதற்கு அடியேன் வெயிட்டிங்).

தொடர் முடிந்தும், எட்டியப்பன், சிவசேகரம், கனவான்கள் ,இரண்டாம் கனவான்கள் ,அல்லா பிச்சை ,குல்சாரிலால் நந்தா , ரெட்டி , கோவிந்தசாமி, நாலாவது மாடி இளசுகள் என அதன் கேரக்டர்கள் நம் மனதில் அவ்வப்போது எட்டிப் பார்த்துச் செல்கின்றன.

இது எந்த பத்திரிக்கை தொடர்பானது என்பது போகப் போக தெரிந்து விட்ட நிலையில், இதன் சுவாரசியம் அதிகமானது. அவற்றை லாவகமாக இழுத்து வந்து , சுபம் போட்டுவிட்டார். இதைத்தொடர்ந்து இவர்கள் என்ன செய்தார்கள், என்ன ஆனார்கள் என்பது ஜந்து இரண்டில் வந்தாலும் வரலாம். அதுவரை காத்திருப்போம்.

இனி ஜந்து இல்லாத காலைகளை எப்படிப் போக்குவது என்று தெரியவில்லை. எப்படி கோமதி நாயகத்திற்கு , டெவில் பிரசாத்தோ, அதே போல , முடிந்த ஜந்துவிற்கு, ஆரம்பிக்க இருக்கும் புனித பூமர் இருக்கும் என்று நம்புவோம்.( சோக அத்யாங்களுக்குக் கூட மீம் போட்ட என்னை மாதிரி ஜந்துக்களுகு , அந்நியன் எதும் தண்டனை வைதிருப்(பாரா) என்று தெரியவில்லை. அவருக்கு நாங்கள் சொல்லிக் கொள்வதெல்லாம் , நாங்கள் வெறும் வெப்பன் சப்பிளை மட்டுமே, ஆக்கம் பாரா, அங்கே கதவை தட்டவும்) நன்றி நமக்கம்..

Hi, I’m tamilvalai

Leave a Reply