சில்லுகள்

உடைந்த கண்ணாடித் துண்டுகளை
ஒட்டி வைக்கத்தான்
இங்கே எவ்வளவு முயற்சிகள்.
அவை கிழித்துப் பழகியவை
இரத்தம் பார்க்கத் துடிப்பவை
சேரவே வேண்டாம் என்று முடிவெடுத்தவை.
இருந்தும் மனித மனம்
அற்புதங்களை எதிர்பார்க்கிறது.
சில சமயங்களில் அது நடந்தும் விடுகிறது.