கணக்கு

ஆயிரமாயிரம் அடிகள் நீந்தி யமுனையின் அடியில்
அந்தக் கதவை கண்டான்
தட்டிப் பார்த்தான்
உதைதுப் பார்த்தான்
கெஞ்சிப் பார்த்தான்
கதவு திறக்கவில்லை
ஏதோ குரல் கேட்க
ஒட்டுக் கேட்டான்
இவன் எதற்கு வந்தான்
இவன் கணக்கை பார்த்தவர் யார்
இவனுக்கு அனுமதி கிடையாது
நின்று பார்த்துவிட்டு செல்லட்டும்
கதவிலிருந்து நகர்ந்துவிட்டார்கள்
ஆஸ்பத்திரியின் மெஷினில்
சிகப்புக் கோடு
ஆட்டம் போட்டது