Month: August 2022

தமிழ்

நிழல் 

நிழல் நீர்த்துப்போன மனிதன்  நிழலைக் காணாது கவலையுற்றான் உன் பாவங்களைக் களைந்து விட்டேன் போ என்றான் சித்தார்த்தன்  நக்கிப் பிழைத்தே வாழ்ந்தவனுக்கும் நஞ்சுள்ளம் கொண்டவனுக்கெல்லாம் நிழல் தெரிகிறதே  என்றான் மனிதன்  காற்றுக்கும்  நீருக்கும்  நிலவுக்கும்  இரவுக்கும் மனதிற்கும் கனவுக்கும் உறவுக்கும் நிழலில்லை ,  இனி உனக்கும்தான் என்றான் சித்தார்த்தன்   மனிதன் மறைந்தான் , நிழலற்ற கவலையுடன்.