தமிழ்

தொட்டால் தான் என்ன

ஆகப் பெரியவராம்

அவரைத் தொடவே கூடாதாம் 

தொட்டால் தீட்டாம் 

நான் 

நட்ட நெல் 

தீட்டில்லை 

சுட்ட செங்கல்

தீட்டில்லை

வளர்த்த வாழை 

தீட்டில்லை

ஆனால் 

நான் மட்டும் தீட்டு 

வணங்காமல் வந்து விட்டேன்

சுத்தமானவனாய்

Hi, I’m tamilvalai

Leave a Reply