Moviestamilதமிழ்படம்

மஹான் – விமர்சனம்

நல்ல கதை ஆனாலும் இழுத்து சோதித்து விட்டார்கள்.

இரண்டே முக்கால் மணி நேரம் தான் படம் எடுப்பேன் , பாபி சிம்ஹா இருக்கவேண்டும் , பழைய கார் ரெண்டு என்று predictable ஆக மாறி வருகிறார் கார்த்திக் சுப்பாராஜ்.

பல  இடங்களில் ஜிகர்தண்டா வும், ஜகமே தந்திரம் ஞாபகம் வருகின்றன, நல்ல விதமாக அல்ல. விக்ரம் இருப்பதால் பிழைக்கிறோம். பாபி சிம்ஹா, ஏனோ  ஒட்ட மறுக்கிறார்.

அரசியல்வாதி கேரக்டரில் வரும் வேட்டை முத்துக்குமார் ( சார்பேட்டா மாமா), சனத் தன்  பங்கை செய்கிறார்கள்.

நீளம் படத்தின் மிகப்பெரிய மைனஸ். இரண்டு மணி நேரத்தில் எடுத்து முடிக்க வேண்டிய படத்தை, இழுத்து ஒரு வழி பண்ணி விட்டார்கள்.

தப்பு செய்ய தடுக்கும் சுதந்திரம், சுதந்திரமே அல்ல என்று காந்தி சொன்னாராம். அதை வைத்து விக்ரம், தம், தண்ணி , கொலை என்று எல்லாம் செய்கிறார். ரேப் ஒன்று தான் மிச்சம் :(.

மற்றபடி –

விக்ரம்- ஈர்க்கிறார்

சிம்ஹா – ஓகே

சுப்பாராஜ் – இன்னும் எடிட்டிங் தேவை

துருவ்- சம்திங் மிஸ்ஸிங்

சிம்ரன் – “எப்படி இருந்த சிம்ரன் இப்ப சவுக்கார் ஜானகி மாதிரி ஆக்கிடீங்க”

பின்னணி இசை – நன்று

படம் – சுமார்

Hi, I’m tamilvalai

Leave a Reply