arasiyalmodipoliticsrajinitamil

தேவதூதன் வந்துவிட்டான்

தினமும் காலை மாலை வரும் செய்திகளை பார்த்து வருத்தப்படுபவரா நீங்கள்?  இந்த பதிவு உங்களுக்கானது 

நம்மை சுற்றி நிறைய நெகடிவ் சக்திகள் இருக்கின்றன , உதாரணத்திற்கு 

  1. ஜி அதை நொட்டுவார் இதை நொட்டுவார் என்று மார்தட்டி, சைனாவிடம் அரை கிலோமீட்டர் விட்டுக்கொடுக்கும் கும்பல்
  2. “ஆக” எங்க ஆள் ஏன் பிரதமர் ஆக கூடாது  என்று வெட்கமே இல்லாமல் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கும் கும்பல்
  3. பப்பு பப்புனு கிண்டல் பண்றீங்களே , நாடாளுமன்றத்தில் “மெய்ன் தமிழ் ஹூன்” அப்படினு கர்ஜித்தார் தெரியுமா என்று கட்சியில் மிச்சம் இருக்கும் நாலு பேரின் வேட்டியை உருவும் கும்பல்
  4. அடங்க மறு , சொறிஞ்சி  விடுனு ஊருக்கு வெறி ஏத்தி விட்டு  , கடைசியில்  “அவர்களிடம்”  செருப்பணியாமல் சென்று, கைகட்டி  பம்மும் அந்த கும்பல் 
  5. ஏசு நாதர் என் ப்ரெண்ட் தான் — புஹா ஹா ஹா என்று மூக்கை நோண்டும் கும்பல் 
  6. கையில் சட்டியை வரைந்து , குடிசையை பார்த்தால் கை நமநமக்கும் மங்குனி கும்பல் 
  7. கோபாலபுரம் மற்றும் ஜி போடும் பிஸ்கட்டுக்கு செய்தி சொல்லும் வீச்சு கும்பல்
  8. அதாவது பீலிக்ஸ் என்று முந்தாநாள் அடித்த போதையில் கண்டபடி வன்மத்தை காக்கும் கும்பல் 
  9. நான் கோட்சேவின் பேரன் என்றொரு   துடைப்ப குச்சி , மாணவர்கள் புரிஞ்சுக்கனும் என்று வாய் வழியே ஆய் போகும் கும்பல்

இவர்களிடம் இருந்து இரண்டு நாள் தள்ளி இருந்து பாருங்கள். இதையெல்லாம் விட்டு விட்டால் போர் அடிக்குமே என்று யோசிக்க வேண்டாம். இருக்கவே இருக்கிறார் நமது ஆபத்பாந்தவன். 

யார் அவர்?

பூமர் அங்கிலாக மாறிக்கொண்டிருக்கும் 80ஸ்/90ஸ் கிட்ஸ்களின் ஆதர்ஷ நாயகன் .

கடா மீசை வைத்து , காடுகளை அழித்து, யோகியை  வைத்து வியாபாரம் செய்யும் அயோக்கியனல்ல அவர். கேமரா இருந்தாலும் , அது தெரியாமல் அழகு நடிகைகளுடன் மெத்தையில் குட்டிக்கரணம் அடிக்கும் அப்பாவி அவர் . 

குண்டலினி சக்தியை எழுப்புகிறார் என்று புரட்டுகளை பரவ விட்டு நற்பெயரை கெடுக்க ஒரு கூட்டம் இருந்தது . அதற்கும் இருமுறை தம் கட்டி குதித்து பார்த்து குண்டலினி சக்தி எல்லாம் என் குசுவிற்கு சமானம் என்று சிரித்த முகத்துடன் அடுத்த கப்சாவிற்கு தாவுபவர் அவர். 

ஆமை கறி சாப்பிட்டு , அறுபதாயிரம் பேரை ஷேர் ஆட்டோவில் அழைத்து சென்று போர் புரிந்தேன் என்று மூக்கில் தங்கம் தேடும் அற்பி அல்ல அவர் .

தனக்கொரு பிரச்சினை, தன்னை சார்தொருக்கு ஓர் பிரச்சனை என்றதும் , தனி நாடு கண்ட தங்கம் அவர் .

அவர் – கைலாச தேசத்தின் சிற்பி , ரஞ்சிதாவின் மனம் கவர்ந்த குப்பி .

பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி என்று சகலத்திலும் , சமகால விஞ்ஞானிகளுக்கே சவால் விடும் அவரை அடுத்த நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கிறேன் .

இவன் 

குருநாதன் நித்யாவின் சிஷ்யன்

Hi, I’m tamilvalai

Leave a Reply